கோவையில் மொத்தம் 139 கி.மீ. தூரத்துக்கு 3 கட்டங்களாக மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. முதல்கட்டமாக அவிநாசி ரோட்டில் இருந்து கருமத்தம்பட்டி வரையிலும், உக்கடத்தில் இருந்து சத்திய மங்கலம் ரோட்டில் வலியம் பாளையம் பிரிவு வரையிலும் 44 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
விரிவான ஆய்வு, ஒப்புதல்களுக்குப் பிறகு 2-ம் கட்டம் மற்றும் 3-ம் கட்டப் பணிகள் தொடங்க உள்ளன. தற்போது உள்ள 139 கி.மீ. திட்டத்தில் இருந்து மேலும் நீட்டிப்பு மற்றும் புதிய பகுதிகளை சேர்ப்பதற்கான பரிந்துரைகள் குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது.
கோவையில் முக்கிய சாலைகளில் மேம்பாலங்கள் கட்டப்படும் இடங்களுக்கு இணையாக மெட்ரோ ரெயில் தடம் அமைய உள்ளது. இதற்குத் தேவையான நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. போதுமான வாகன நிறுத்துமிட வசதி, எஸ்கலேட்டர்கள், லிப்ட் வசதி, ஏற்கெனவே உள்ள சாலை யைக் கடப்பதற்கு இடவசதி உள்ள இடங்களில் மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. விமான நிலையம், ரெயில் நிலை யம், பஸ் நிலையங்கள், பெரிய நிறுவனங்கள், வணிக வளாகங்கள் போன்ற இடங்களில் பொது, தனியார் பங்களிப்பின் கீழ் மெட்ரோ ரெயில் நிலையங்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவை மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு ரூ.9,424 கோடி மதிப்பீடு செய்திருப்பதாகவும், 2027-ம் ஆண்டில் பணி கள் நிறைவடையும் என்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் (ஆர்டிஐ) தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது:-
முடிவடைந்த பணிகள், நடை பெற்று க்கொண்டிருக்கிற பணிகள், பரிந்துரைக்கப்பட்டுள்ள பணிகள் குறித்த விவரங்களை சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகத்திடம் கேட்டிருந்தேன். அதில், விரிவான திட்ட அறிக் கைப்படி (டி.பி.ஆர்) கோவை மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு ரூ.9,424 கோடி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு ஒப்புதல் அளித்தால், 2027-ம் ஆண்டுக்குள் பணிகள் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Leave a Reply