உணவகங்கள் தனியாக சேவைக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என மத்திய அரசு உத்தரவு.
நாடு முழுவதும் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் உணவகங்கள் தானாக சேவைக் கட்டணத்தை வசூலிக்கக் கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.தங்கும் விடுதிகள்,உணவகங்கள் சேவைக் கட்டணம் விதிப்பது தொடர்பாக மத்திய நுகர்வோர் அமைச்சகம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.அதன்படி,
- எந்தவொரு தங்கும் விடுதியும் அல்லது உணவகங்களும் தானாக வாடிக்கையாளரின் பில்லில் சேவைக் கட்டணத்தை சேர்க்க கூடாது.
- வேறு எந்தப் பெயரிலும் சேவைக் கட்டணம் வசூலிக்கப்படக் கூடாது.
- எந்தவொரு தங்கும் விடுதியும் அல்லது உணவகமும் ஒரு வாடிக்கையாளரிடம் சேவைக் கட்டணத்தைச் செலுத்தும்படி கட்டாயப்படுத்த கூடாது
- சேவைக் கட்டணம் என்பது வாடிக்கையாளரின் விருப்பம் என்பதை அவர்கள் நுகர்வோருக்குத் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும்.
- உணவுக் கட்டணத்துடன் சேர்த்து,மொத்தத் தொகைக்கு ஜிஎஸ்டி விதித்து சேவைக் கட்டணத்தை வசூலிக்க கூடாது.
- வழிகாட்டுதல்களை மீறி ஒரு தங்கும் விடுதி அல்லது உணவகம் சேவைக் கட்டணத்தை வசூலிப்பதாக ஏதேனும் வாடிக்கையாளர் கண்டால்,அதை பில் தொகையில் இருந்து நீக்குமாறு சம்பந்தப்பட்ட உணவகத்திடம் கோரலாம்.
- இதனை மீறி சேவைக் கட்டணங்களை வசூலிக்கும் தங்கும் விடுதி/உணவகங்களுக்கு எதிராக வாடிக்கையாளர்கள் தேசிய நுகர்வோர் உதவி எண் 1915-ல் புகார் செய்யலாம்.
- மேலும்,தேசிய நுகர்வோர் (NCH) மொபைல் செயலி மூலமாகவோ புகார் அளிக்கலாம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply