கோவை அருகே உள்ள மதுக்கரையை சேர்ந்த 38 வயது பெண். இவருக்கு ஒரு மகள், ஒரு மகன் ஆகியோர் உள்ளனர். இவரது கணவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனையடுத்து பெண்ணுக்குஅதே பகுதியை சேர்ந்த பெயிண்டர் பாலசுப்பிரமணியம் (வயது 48) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் திருமணம் செய்து கொள்ளாமல் கணவன்-மனைவியாக ...

கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள ஜி.என்.மில்லை சேர்ந்தவர் நடராஜன் (வயது 83). ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர். சம்பவத்தன்று இவரது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் உடனடியாக மின் கட்டணத்தை செலுத்த வில்லை என்றால் இரவுக்குள் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என கூறப்பட்டு இருந்தது. உடனடியாக பணத்தை செலுத்த இந்த லிங்கை அழுத்தவும் ...

பினாமி பெயரில் சசிகலா வாங்கிய ரூ. 15 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் வருமான வரித்துறையால் முடக்கப்பட்டுள்ளது. 2017-ம் ஆண்டு சசிகலா மற்றும் அவரின் உறவினர் தொடர்பான 127 இடங்களில் வருமானவ வரித்துறையினர் சோதனை நடத்தினர்.இந்த சோதனையின் தொடர்ச்சியாக சசிகலாவுக்கு சொந்தமான சொத்துக்களை வருமான வரித்துறையினர் முடக்கி வருகின்றனர். பினாமி சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கையை வருமான ...

கோவை மாவட்டத்தில் கடந்த 28 ந் தேதி காலை விநியோகம் செய்யப்பட்ட ஆவின் பால் பாக்கெட்டுகள் அதிகளவில் கசிவு ஆனநிலையிலும், உடைந்த, பயன்பாட்டிற்கு தகுதியற்ற பால் டப்புகளிலும் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், சிறுமுகை, ஆர்.எஸ்.புரம், சுந்தரேசன் லேஅவுட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பால் முகவர்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட ஆவின் பால் பாக்கெட்டுகள் ...

கோவை பெரியதடாகம் பிரிவு ஆனைகட்டி ரோட்டில் சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக தடாகம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். சந்தேகத்துக்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கஞ்சா விற்பனை செய்த மதுரையை சேர்ந்த ...

கோவை சரவணம்பட்டி அருகே உள்ள சிவானந்தாபுரத்தை சேர்ந்தவர் அரவிந்த் (வயது 27). இவர் வெளிநாட்டு பணம் மாற்றும் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவர் வடகோவையில் உள்ள டாஸ்மாக் பாருக்கு மது குடிக்க சென்றார். அங்கு இருந்த சப்ளையரிடம் ரூ. 500 பணத்தை கொடுத்து மது வாங்கி வரும்படி கூறினார். அதனை பெற்றுக்கொண்ட சப்ளையர் ...

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள சேத்துமடையை சேர்ந்த 17 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மாணவிக்கு கோழிப்பண்ணையில் வசித்து வந்த எலக்ட்ரிசீயன் காளிமுத்து (வயது 23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் ...

கோவை சவுரிபாளையத்தில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு செயல்பட்டு வருகிறது. இந்த குடியிருப்பில் சூப்பர்வைசராக ராஜேந்திரன் (வயது 84) என்பவர் உள்ளார். சம்பவத்தன்று இந்த குடியிருப்பிற்கு சில வாலிபர்கள் வந்தனர். அவர்கள் அங்கு இருந்த காவலாளியிடம் தங்களது செல்போனில் உள்ள சில பெண்களின் போட்டோவை காட்டினர். பின்னர் அவர்கள் தங்கி இருக்கும் குடியிருப்பை காட்டுங்கள் என கூறியுள்ளனர். ...

மதுரை: நாகர்கோவில் காசியின் லேப்டாப், மொபைலில் 400 ஆபாச வீடியோக்கள் இருந்ததாக சிபிசிஐடி கூறியது அதிர்ச்சியளிக்கிறது என்று உயர்நீதிமன்ற கிளை நீதிபதி தெரிவித்துள்ளார். நாகர்கோவில் காசியிடம் 1,900 நிர்வாணப்படங்கள் இருந்ததாக கூறியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. 120 பெண்கள் பாதிக்கப்பட்ட நிலையில் சிலர் மட்டுமே சாட்சியம் அளிக்க முன்வந்துள்ளனர். இன்னும் பல சாட்சிகளை போலீஸ் விசாரிக்க வேண்டி உள்ளதால் ...

சென்னை முகப்பேர் கிழக்கு பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் ஸ்ரீதர் என்பவர் வேதியியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் 12ஆம் வகுப்பு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் சென்னை மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பில் புகார் அளித்தனர். புகாரின் சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் விசாரணை நடத்தினர். ...