தொடர் கதையாகும் பாலியல் தொல்லைகள் … பள்ளி மாணவிகளிடம் அத்துமீறிய கெமிஸ்ட்ரி ஆசிரியர் கைது ..!!

சென்னை முகப்பேர் கிழக்கு பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் ஸ்ரீதர் என்பவர் வேதியியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவர் 12ஆம் வகுப்பு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் சென்னை மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பில் புகார் அளித்தனர். புகாரின் சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது, கொரோனா காலக்கட்டத்தில் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்பட்டன. அந்த சமயத்தில் மாணவிகளின் செல்போன் எண்களை பெற்ற ஆசிரியர் ஆபாசமாகவும் பாலியல் உணர்வுகளை தூண்டும் வகையிலும் பேசி வந்தது தெரியவந்துள்ளது. அதுமட்டுமில்லாமல், டியூஷன் எடுக்கும் இடத்திலும் மாணவிகளிடம் அத்துமீறலில் ஈடுபட்டதும் ஆசை வார்த்தை கூறி வெளியில் அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்ததும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. முன்னதாக மாணவிகளுக்கு ஆபாசமாக அனுப்பிய வாட்ஸ் அப் குறுஞ்செய்திகள் மற்றும் செல்போனில் பேசிய உரையாடல்கள் சமூக வலைதளங்களிலும் வைரலாகி சர்ச்சை ஆகியுள்ளது. தொடர்ந்து ஸ்ரீதர் கைது செய்யப்பட்டுள்ளார்.