தமிழக அமைச்சரவையில் மாற்றம்

ட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முடிந்த கையோடு, தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்படவது உறுதியாகி உள்ளது. நிர்வாகத் திறனை மேம்படுத்தவும், துறைகளின் செயல்பாடுகளை வேகப்படுத்தவும் சுமார் 10 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்படலாம் எனத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, அமைச்சர்கள் கீர்த்தனா, ஜெகதீஸ்வரி, சரத்குமார், CTR நிர்மல்குமார் மற்றும் பிரபு ஆகியோரின் தற்போதைய துறைகள் மாற்றப்பட்டு, அவர்களுக்குப் புதிய பொறுப்புகள் வழங்கப்பட அதிக வாய்ப்பிருப்பதாகத் தகவல்கள் கசிகின்றன.

அதேவேளையில், இந்த மாற்றத்தின் போது சிலருக்குப் பதவி இழப்பும் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக, அமைச்சர் ஜெகதீஸ்வரி மீது தொடர்ச்சியாகப் பல்வேறு புகார்கள் தலைமைக்கு வந்த வண்ணம் இருப்பதால், அவரது அமைச்சர் பதவி பறிக்கப்படக் கூடும் எனக் கூறப்படுகிறது. கூட்டத்தொடர் நிறைவடைந்தவுடன் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகலாம் என்பதால், தற்போதே அறிவாலயத்திலும் தலைமைச் செயலகத்திலும் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது..