தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

சென்னையில் 15 நாளாக போராடி வரும் தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் குழு இன்று காலை 11.30 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

சென்னையில் உழைப்பவர் உரிமை இயக்கம் சார்பில் தூய்மைப் பணியாளர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், கோரிக்கை மனுக்களை முதல்வர் நேரடியாகப் பெறுவதற்கு சந்திப்பு நேரம் ஒதுக்கக் கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 10 நாள்களுக்கும் மேலாக அவர்கள் மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் கட்டட கிழக்குப் பகுதி வாயிலில் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். விசில் ஊதுதல், துடைப்பத்தால் தூய்மைப்படுத்துதல், மெழுகுவர்த்தி ஏந்துதல் போன்ற நூதன முறையில் போராட்டம் நடத்தி வந்த தூய்மைப் பணியாளர்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை கருப்பு உடையில் வாயில் கருப்புத் துணி கட்டியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தூய்மைப் பணியாளர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், சென்னை ரிப்பன் மாளிகையில் இன்று காலை 11.30 மணிக்கு அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், ராஜ்மோகன் உள்ளிட்டோர் தூய்மைப் பணியாளர்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.