கோவையில் பிளஸ்-1 மாணவியிடம் ஆபாச வீடியோக்களை காண்பித்து பலமுறை பாலியல் பலாத்காரம்- தாயின் கள்ளக்காதலன் போக்ஸோவில் கைது..!!

கோவை அருகே உள்ள மதுக்கரையை சேர்ந்த 38 வயது பெண். இவருக்கு ஒரு மகள், ஒரு மகன் ஆகியோர் உள்ளனர். இவரது கணவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனையடுத்து பெண்ணுக்குஅதே பகுதியை சேர்ந்த பெயிண்டர் பாலசுப்பிரமணியம் (வயது 48) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் திருமணம் செய்து கொள்ளாமல் கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்தனர். எனவே அவர் தனது மகள், மகன் ஆகியோருடன் பாலசுப்பிரமணியம் வீட்டில் வசித்து வந்தார்.
பெண்ணின் மகள் தற்போது பிளஸ்-1 படித்து வருகிறார். இவரிடம் பாலசுப்பிரமணியம் ஆபாச வீடியோக்களை காண்பித்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்து வந்தார். இது குறித்து மாணவி தனது தாயிடம் கூறியும் அவர் அதனை கண்டுகொள்ளவில்லை. தொடர்ந்து பாலசுப்பிரமணியத்தில் அத்துமீறல் அதிகரிக்க தொடங்கியது. தினசரி அவர் மாணவியை வற்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்து வந்தார்.
இந்த கொடுமை தாங்க முடியாத மாணவி இது குறித்து தனது பள்ளி தலைமை ஆசிரியையிடம் தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்புக்கு தகவல் தெரிவித்தார்.
அவர்கள் பேரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிளஸ்-1 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பாலசுப்பிரமணியத்தை கைது செய்தனர்.

பின்னர் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.