தஞ்சாவூரில் திமுக முன்னாள் கவுன்சிலர் ஒருவர் ஆக்கிரமித்துள்ள கட்டடங்களை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து தரைமட்டமாக்கியது மட்டுமின்றி அவரிடம் இருந்து சுமார் 100 கோடி மதிப்பிலான சொத்துக்களை மீட்டுள்ளனர். தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் மாநகராட்சி சொந்தமான சுதர்சன சபா அமைந்துள்ளது. இந்த சபாவில் ஆன்மிக சொற்பொழிவு, புத்தக வெளியீடு உள்ளிட்டவை நடைபெறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. ...

தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டு மூலம் மிகவும் பிரபலமாக இருந்தவர் பப்ஜி மதன். ஆன்லைன் விளையாட்டின் போது சிறுவர்களிடம் ஆபாசமாக பேசியதுடன், அவர்களை ஏமாற்றி பண மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக, விசாரணை மேற்கொண்ட போலீசார், பண மோசடியில் ஈடுபட்ட பப்ஜி மதனை கைது செய்தனர். தற்போது சென்னை, புழல் சிறையில் பப்ஜி மதன் ...

சமூக வலைதளங்கள் மூலம் குற்றங்கள் அதிகரித்து வருவதால் அதனை தடுக்கும் வகையில் சவுதி அரேபியா அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அந்த வகையில் வாட்ஸ்ஆப் செயலியில் சிவப்பு நிற குறியீடான ஹார்ட் இமேஜியை அனுப்பி பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தால் அந்த நபருக்கு இரண்டு முதல் ஐந்து ஆண்டுகளுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ...

மாட்டுத்தீவன ஊழல் தொடர்பான 4 வழக்குகளில் தண்டிக்கப்பட்ட தண்டிக்கப்பட்ட லாலு பிரசாத் யாதவ், தற்போது மேலும் ஒரு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார். தோரணாடா கருவூலத்திலிருந்து 139 கோடி ரூபாய் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. லாலு பிரசாத் யாதவ், மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு ...

இளைஞரை கொலை செய்து தலையைத் தூக்கிச் சென்ற மர்ம கும்பலால் மக்கள் பெரும் அதிர்ச்சியும் அச்சமும் அடைந்துள்ளனர். திருப்பூர் செரங்காடு பகுதியில் உள்ள தனியார் எம்பிராய்டரிங் நிறுவனத்தில் இருநாள்களுக்கு முன்பாக கும்பகோணத்தைச் சேர்ந்த சதீஷ் (24) என்பவர் பணியாற்றி வந்தார். இதே நிறுவனத்தில் திருச்சியைச் சேர்ந்த ரஞ்சித் (22) என்பவரும் பணியாற்றி வந்துள்ளார். இவர்கள் இருவரும் ...

குற்ற சம்பவங்கள் தொடர்பான செய்திகளைச் சேகரிக்கும் பத்திரிக்கையாளர்கள் குறிவைக்கப்பட்டு கொலை செய்யப்படும் சம்பவம் மெக்சிகோவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோவில் உள்ளூர் அரசாங்கத்தின் ஊழல் மற்றும் குற்றச் சம்பவங்கள் தொடர்பான செய்திகளைச் சேகரிக்கும் பத்திரிகையாளர்கள் குறிவைத்து சுட்டுக் கொலை செய்யபடுகின்றனர். கடந்த ஒன்றரை மாதத்தில் மட்டும் 5 பத்திரிகையாளர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த ...

குஜராத் அருகே நடுக்கடலில் பாகிஸ்தானிலிருந்து மீன்பிடி படகில் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே இது குறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடற்படையினருக்கு தகவல் கொடுத்தனர். இரு தரப்பினரும் சேர்ந்து போதைப்பொருள் வரும் படகை மடக்க திட்டம் தீட்டினர். போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்த ...

தெலுங்கு மொழியில் செம்மரக் கடத்தலின் பின்னணியில் எடுக்கப்பட்டு, அண்மையில் வெளியான புஷ்பா திரைப்பட பாணியில், ஒரு செம்மரக் கடத்தல் கும்பல் காவல்துறையிடமிருந்து தப்பியோடியுள்ளது. ஆந்திர மாநிலத்திலிருந்து திருமண கோஷ்டியினர் போல நடித்து, தமிழக எல்லைக்குள் நுழைய முயன்ற 40 பேர் கொண்ட செம்மரக் கடத்தல் கும்பல், காவல்துறையினர் சோதனையிட முயன்றபோது, தப்பியோடியது. இவர்கள் அனைவரும், தமிழகத்திலிருந்து ...

திருப்பூரில் கடந்த திங்கள்கிழமை காலை தாராபுரம் சாலை புதுநகர் பகுதியில் சூட்கேசில் பெண் சடலம் இருந்த வழக்கில் கொலை செய்த அபிஜித் மற்றும் அவருக்கு உதவிய ஜெய்லால் ஆகிய இரு நபர்களை பிடிக்க திருப்பூரிலிருந்து இரண்டு தனிப்படைகள் ஓசூர் மற்றும் கர்நாடகாவில் முகாமிட்டுள்ளனர். கடந்த 7 ஆம் தேதி காலை திருப்பூர், தாராபுரம் ரோட்டில், புதுநகர் ...

கோவை:கோவை மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடி ‘ரெய்டு’ நடத்தி, கணக்கில் வராத, ஒரு லட்சத்து 55 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.கோவை மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் கோவைப்புதுாரில் அமைந்துள்ளது. இங்கு நேற்று மாலை 4:30 மணிக்கு திடீரென லஞ்ச ஒழிப்பு போலீஸ் கூடுதல் எஸ்.பி., திவ்யா தலைமையில் போலீசார் ...