சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக பணம் நூதன மோசடி-பெங்களூர் நபருக்கு வலை..!

கோவை சுந்தராபுரம், லட்சுமணன் நகரை சேர்ந்தவர் செல்வராஜ். அவரது மகன் மதன்குமார் (வயது 31) இவரிடம் பெங்களூரைச் சேர்ந்த திப்பு என்பவர் சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறினாராம். இதற்காக ரூ1 லட்சம் வங்கியில் செலுத்துமாறு கேட்டார். இதை நம்பி மதன் குமார் வங்கி மூலம் ரூ 1 லட்சம் அனுப்பி வைத்தார்.வேலை எதுவும் வாங்கிக் கொடுக்கவில்லை. பணத்தை மோசடி செய்து விட்டார். இதுகுறித்து மதன் குமார் போத்தனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்து திப்புவை தேடி வருகிறார்கள்.