சிங்காநல்லூர் பஸ் நிலையத்தில் சப்- இன்ஸ்பெக்டர்,ஏட்டுவை சிறை பிடித்த திருநங்கைகள் 6 பேர் மீது வழக்குபதிவு..!

கோவை சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் செல்வராஜ்.நேற்று முன்தினம் இவர் ஏட்டு ரவிக்குமாருடன் இரவு ரோந்து பணியில் இருந்தார்.அப்போது சிங்காநல்லூர் பஸ் நிலையம் அருகே மணிகண்டன் (வயது 32) என்பவரை 6 திருநங்கைகள் சேர்ந்து தாக்கி செல்-பணத்தை பறிப்பதாக தகவல் வந்தது.இதையடுத்து சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், ஏட்டு ரவிக்குமார் ஆகியோர் ஜீப்பில் சிங்காநல்லூர் காமராஜர் ரோட்டில் உள்ள பஸ் நிலையம் பகுதிக்கு விரைந்து சென்றனர்.அங்கு நின்று கொண்டிருந்த திருநங்கைகளிடம் இதுபற்றி கேட்டபோது அவர்கள் 6 பேரும் சேர்ந்து சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், ‘ ஏட்டு ரவிக்குமார் ஆகியோரை தகாத வார்த்தைகளால் பேசி, நகரவிடாமல் சுற்றி நின்று கைதட்டி, பாட்டுபாடி அவர்களை சிறை பிடித்தார்களாம்.
இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்றனர். அதற்குள் 6 திருநங்கைகளும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.போலீசார் வழக்கு பதிவு செய்து 6 பேரைதேடி வருகிறார்கள்.இவர்கள் மீது அரசு ஊழியரை பணி செய்யவிடாது தடுத்தல் தகாத வார்த்தைகளால் திட்டுதல்”உட்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.