கோவை : ஈரோடு , கோட்டை பகுதியில் உள்ள காசி அண்ணா வீதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகள் தாரகா (வயது 22)இவர் கோவை ராம்நகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 28ஆம் தேதி பணியின் நிமித்தமாக திருப்பூருக்கு சென்றிருந்தார்.பணி முடிந்து இரவில் திருப்பூரில் இருந்து பஸ்சில் கோவைக்கு வந்தார் ஹோப்காலேஜ் பகுதியில் இறங்கினார் .அங்கு நின்று கொண்டிருந்த ஆட்டோவில் ஏறி தான் தங்கியிருந்த இடத்துக்கு சென்று கொண்டிருந்தார். .நடு வழியில் ஆட்டோ டிரைவர் ஆட்டோவை நிறுத்தி அந்த பெண்ணை மானபங்கம் செய்ய முயன்றாராம்.தாரகா மறுக்கவே ,அவரை அடித்து உதைத்தாராம். பின்னர் ஆட்டோவை வேகமாக ஓட்டி சென்றார். உடனே தாரகா ஆட்டோவில் இருந்து வெளியே குதித்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.ரோட்டில் கிடந்த தாரகாவை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் .இது குறித்து பீளமேடு போலீசில் புகார் செய்யப்பட்டது .சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்கு பதிவு செய்து உக்கடம் அருள் நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முகமத் சாதிக் (வயது 43) என்பவரை இன்று கைது செய்தனர். இவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ,மானபங்கம் உட்பட 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Leave a Reply