கோவை தொழில் அதிபர் வீட்டில் ரூ.13.50 லட்சம் திருடிய வேலைக்காரன் சிறையில் அடைப்பு..!

கோவை பாப்பநாயக்கன்பாளையம் ஜி. கே. டி .நகர் சேர்ந்தவர் செல்வகுமார் ( வயது 56) தொழில் அதிபர். இவர் கோவையில் கட்டுமான பொருட்கள் விற்பனை நிறுவனம் நடத்தி  வருகிறார்.இந்த நிலையில் இவர் வியாபாரம் தொடர்பாக சென்னைக்கு சென்றார்.மறுநாள் கோவை திரும்பினார். அப்போது வீட்டில் உள்ள பீரோவில் இருந்த ரூ 16 லட்சத்து 65 ஆயிரத்தை காணவில்லை. மீதமுள்ள ரூ. 3.35 ஆயிரம் அங்கே இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வகுமார் வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தார். அதில் அவரது வீட்டில் வேலை செய்து வந்த சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சகாதேவன் (வயது 62 )என்பவர் இந்த திருட்டை நடத்தி இருப்பது தெரியவந்தது.இந்த நிலையில் சகாதேவனை காணவில்லை .அவர் மீது ரேஸ் கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.இந்த நிலையில் சகாதேவனை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.13 லட்சத்து 63 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.