கோவை: ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்தவர் பாலு (வயது 37) இவர் கடந்த 2 மாதங்களாக கோவை காந்திபுரம் 7-வது வீதியில் (விரிவாக்கம்) உள்ள டாஸ்மாக் பாரில் ( எண் 1516)ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவில் 4 பேர் மது குடிக்க சென்றனர்.பார் ஊழியர்கள் கடை மூடப்பட்டு விட்டது. நாளைக்கு வாருங்கள் ...

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே காரமடை வனச்சரகத்தில் சந்தன மரத்தினை வெட்டி கடத்த முயற்சி செய்த 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேட்டுப்பாளையம் அருகே காரமடை வனச்சரகத்திற்கு உட்பட்ட குண்டூர் அன்சூர் மோரிப்பாளையம் பகுதியில் சந்தன மரம் வெட்டி கடத்தப்படுவதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த பகுதியில் காரமடை வனச்சரக அலுவலர் திவ்யா ...

கோவை சிறுமுகை பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது மாணவி. 11-ம் வகுப்பு மாணவி இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் கவுதம்(வயது19).கூலித்தொழிலாளி. பக்கத்து வீடு என்பதால் சிறுமியிடம், கவுதம் நட்பாக பழகி வந்தார். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக ...

பேரூராட்சி துணைத் தலைவர் மீது தாக்குதல்:  கோவையில் சாலை மறியல கோவை, சூலூர் கண்ணம்பாளையம் பேரூராட்சி உட்பட்ட பாலு கார்டன் பகுதியில் சாலை அமைக்க தமிழக முதலமைச்சர் சுமார் ஒரு கோடி மதிப்பீட்டில் விட்ட பணிகளை கோவை வந்த போது அண்மையில் துவக்கி வைத்தார். இப்பணிகளுக்காக நில அளவைப் பணிகள் மேற்கொண்ட போது ஒரு குறிப்பிட்ட ...

கோவை மாவட்டம் நெகமம் கொண்டே கவுண்டன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி . இவர் சம்பவத்தன்று தனது பெற்றோரிடம் அருகில் உள்ள கடைக்கு சென்று வருவதாக கூறி சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தனர். ...

மதுரை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கரை 6 மாதம் சிறையில் அடைக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஒட்டுமொத்த நீதித்துறையிலும் ஊழல் நிறைந்துள்ளது என கடந்த ஜூலை 22ஆம் தேதி, யூடியூபர் சவுக்கு சங்கர் ஒரு யூடியூப் தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து ...

சென்னை: சென்னை வண்ணாரப் பேட்டையில், 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் நேற்று  பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டது. சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்த நிலையில் நேற்று  தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றவாளிகளுக்கான தண்டனை விவரத்தை செப்டம்பர் 19 ஆம் தேதி கூறுவதாக நீதிபதி ராஜலட்சுமி தெரிவித்துள்ளார். சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ...

சென்னையில் ஓம்ஆரில் குடிபோதையில் 140 கிலோ மீட்டர் வேகத்தில் காரை ஓட்டியதில் நடந்து சென்று கொண்டிருந்த இரண்டு இளம்பெண் மென்பொறியாளர்கள் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அரசியல் பிரமுகரின் உறவினரும், பிரபல ஓட்டல் அதிபரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் அக்காததாரா பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீலட்சுமியும் (23, ...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு 10 ஆண்டு சிறை ஈமு கோழி மோசடி வழக்கில் உரிமையாளர்கள் இருவருக்கு தல பத்தாண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஈரோடு பெருந்துறையில் ஆர்.கே ஈமு கோழி பண்ணை செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் கண்ணுசாமி, மோகனசுந்தரம் இவர்கள் ஈமு கோழி வளர்ப்பு தொடர்பாக ...

பல ஆண்டுகளுக்கு முன்பாகவே மத்திய அரசும் மாநில அரசும் இவ்வகை மீன்களுக்கு இந்தியாவில் தடை விதித்துவிட்டது. எனினும், தமிழ்நாட்டின் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அவ்வப்போது ஆப்ரிக்க வகை மீன்கள் வளர்த்து விற்பனை செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தகவலறிந்து மீன் பண்ணைகளை சீல் வைக்க அதிகாரிகள் சென்றாலும், தாங்கள் உள்ளூரில் விற்பனை செய்வதில்லை ...