கோவை தங்க பட்டறை உரிமையாளரிடம் ரூ 1.20 கோடி தங்க நகை அபேஸ்- மோசடி தம்பதி கைது..!

கோவை செல்வபுரம் ராஜரத்தினம் நகரைச் சேர்ந்தவர் காஜா உசேன் (வயது 42) இவர் சுக்கர வார்பேட்டையில் தங்க பட்டறை நடத்தி வருகிறார். இவருக்கும் ஆர்.ஜி. வீதி, பல்ஜி வார் சந்தில் வசிக்கும் ,நகைக்கடை உரிமையாளர் விஜயகுமார், அவரது மனைவி விஜயலட்சுமி ஆகியோருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது .காஜா உசேனிடம் தங்க நகைகளை பெற்று அதிக லாபத்தில் விற்பனை செய்து தருவதாக தம்பதி கூறினார்கள். இதனால் காஜா உசேன் அவர்களிடம் தங்க நகைகளை விற்பனைக்கு கொடுத்து வந்தார். இந்த நிலையில் காஜா உசேன்னிடம் இருந்து 3 கிலோ 306 கிராம் தங்க நகைகளை பெற்ற தம்பதியினர் நகைகளை விற்றுக் கொடுக்காமலும், திருப்பிக் கொடுக்காமலும் மோசடி செய்துள்ளனர். இதன் மதிப்பு ரூ.1 கோடியே 20லட்சம் இருக்கும். இது குறித்து வெரைட்டிஹால் ரோடு போலீசில் காஜா உசேன் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பாண்டியம்மாள் வழக்கு பதிவு செய்து விசாரணை விஜயகுமார் (வயது 42) அவரது மனைவி விஜயலட்சுமி (வயது 40)ஆகியோரை நேற்று கைது செய்தார்.இவர்களிடம் விசாரணை நடந்துவருகிறது