மனைவியை இரும்பு கம்பியால் தாக்கிய மாஜி சிஆர்.பி.எப் .போலீஸ்காரர் மீது புகார்..!

கோவை ரத்தினபுரி ,லட்சுமிபுரம் 5-வது விதியை சேர்ந்தவர் தாமோதரன் ( வயது 46 )இவர் சி .ஆர்.பி.எப் போலீஸ்காரராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார்.இவரது மனைவி சாரதா மணி( வயது 45) இவர்களுக்கு கீர்த்தனா ( வயது 10) என்ற மகள் உள்ளார்.ஓய்வு பெற்ற பிறகு தாமோதரன் எந்த வேலைக்கும் ஒழுங்காக செல்வதில்லை. இந்த நிலையில் அவரது மகள் கீர்த்தனா நோட்டு புத்தகம் வாங்கித் தருமாறு கூறினார் .அதற்கு அவர் சம்மதிக்கவில்லை. இது குறித்து சாரதா மணி அவரிடம் கேட்டார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த தாமோதரன் மனைவியை இரும்பு கம்பியால் தலையில் தாக்கினார். இதில் அவரது தலையில் பலத்தக்காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து சாரதா மணி ரத்தினபுரி போலீசில் புகார் செய்தார் போலீசார் தாமோதரன் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் தாக்குதல் உட்பட 4 பிரிவினை வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்..