பெண் ஊழியரின் போனஸ் பணம் கொள்ளை- வீட்டு உரிமையாளர் மகன் கைவரிசை..!!

கோவை செல்வபுரம் சண்முகராஜபுரத்தைச் சேர்ந்தவர் அருண்குமார். இவரது மனைவி பவித்ரா (வயது 29) .டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் கணக்காளராக வேலை பார்த்து வருகிறார். அங்குள்ள முருகேசனின் என்பவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வருகிறார்.இவரது சம்பளம் மற்றும் தீபாவளி போனஸ் பணத்தை வீட்டில் பீரோவில் வைத்திருந்தார்.நேற்று இவர் வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீட்டில் வந்து பார்த்தபோது பீரோவில் இருந்தபோனஸ் பணம் ரூ 15 ஆயிரத்தை காணவில்லை. ஆனால் வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்படவில்லை.இது குறித்து பவித்ரா செல்வபுரம் போலீசில் புகார் செய்தார் .சப் இன்ஸ்பெக்டர் சின்னராஜ் வழக்கு பதிவு செய்து பவித்ரா வசிக்கும் வீட்டின் உரிமையாளர் முருகேசனின் மகனான அசோக் குமார் ( வயது 43) என்பவரை நேற்று கைது செய்தார். பவித்ரா வேலைக்கு சென்ற பிறகு வீட்டில் இருந்த மற்றொரு சாவியை போட்டு வீட்டை திறந்து பணத்தை திருடியதாக தெரியவந்தது.இவரிடம் விசாரணை நடந்து வருகிறது.