பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு-பாய்ந்தது தேசிய பாதுகாப்பு சட்டம்..!

கோவை மாவட்ட பாஜக தலைமை அலுவலகம் மீது கடந்த மாதம் 22ஆம் தேதி பெட்ரோல் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக சதாம் உசேன், அகமது சிகாபுதீன் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக கைது செய்யப்பட்ட இருவர் மீதும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டதற்கான நகல்களை, இருவரிடமும் சிறையில் வழங்கப்பட்டன.