போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிராக பதியப்பட்ட வழக்குகளில் விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க கோரி தமிழக அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போதைய மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 2011 முதல் 2015 ஆம் ஆண்டுகளில் அதிமுக ...

கோவை போத்தனூர் காந்திநகரை சேர்ந்தவர் செல்வம் .இவரது மகன் ஸ்டீபன் ராஜ் (வயது 29) மருத்துவ பிரதிநிதியாக உள்ளார். இவர் கணபதி ரவீந்திரநாத் தாகூர் வீதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் அறை எடுத்து தங்கி உள்ளார் .நேற்று இவரது அறைக்குள் 4 பேர் கொண்ட கும்பல் புகுந்தது. அங்கிருந்த ஸ்டீபன் ராஜை கத்தியை காட்டி மிரட்டி ...

கோவை பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார்,சப் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் ஆகியோர் நேற்று கோல்டு வின்ஸ் – வீரியம்பாளையம் ரோட்டில் வாகன சோதனை நடத்தினார்கள் .அப்போது பைக்கில் வந்த 2 பேரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அவர்களிடம் 1500 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பைக்கும், கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் இவர்கள் பீளமேடு பகுதியில் ...

கோவையில் கடந்த வாரம் பா.ஜ.க. அலுவலகம், மற்றும் இந்து அமைப்பு நிர்வாகிகள் வீடு மற்றும் அலுவலகங்கள், வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டன. இது தொடர்பாக கோவை மாநகர போலீசில் மட்டும் இதுவரை 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் தொடர்புடையவர்களை கைது செய்ய போலீசார் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை ...

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சட்டவிரோத அமைப்பாக அறிவித்து 5 ஆண்டுகள் தடை செய்து மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. மேலும் அதனோடு தொடர்புடைய துணை அமைப்புகளுக்கும் 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகளின் வீடுகள், அலுவலகங்களில் 2 முறை சோதனை நடந்த நிலையில், இந்த நடவடிக்கையை மத்திய அரசு ...

கோவையில் நண்பர்களுடன் குளிக்க சென்ற போது நேர்ந்த விபரீதம் – பெருமாள்பதி கோவில் தடுப்பணையில் மூழ்கி 11ஆம் வகுப்பு மாணவர் பலி ஆலந்துறை அருகே பெருமாள்பதி கோவில் தடுப்பணையில் மூழ்கி 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை ஆலந்துறை பகுதியை சேர்ந்தவர் நவீன்குமார் (16). இவர் அதே பகுதியில் ...

பிஎஃப்ஐ நிர்வாகிகளின் அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் கிடைத்த ஆவணங்கள் குறித்து தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) அதிகாரிகள் கூறியதாவது: பிஎஃப்ஐ நிர்வாகிகளின் அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகளில், எளிதில் கிடைக்கும் பொருட்களை கொண்டு சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் செய்வது எப்படி என்ற கையேடுகள், 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றுவதற்காக ஆவணங்கள், தீவிரவாத ...

தனது விலை உயர்ந்த பைக்குகளில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று அதனை வீடியோவாக பதிவு செய்து யூ டியூபில் பதிவிட்டு பிரபலமானவர் TTF வாசன். இவர் அண்மையில் தனது இருசக்கர வாகனத்தில் மிகவும் வேகமாக செல்வதை வீடியோவாக வெளியிட்டு சர்ச்சையில் சிகக்கினார், பின்னர் தான் யாரையும் பைக்கில் வேகமாக செல்ல வலியுறுத்தவில்லை, நானும் வேகமாக செல்ல மாட்டேன் ...

கடலூர் மற்றும் சிதம்பரத்தில் இந்து முன்னணி ஆதரவாளர் வீட்டில் நேற்று இரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா அமைப்பிற்கு எதிரான நாடு முழுவதும் சோதனை நடத்தப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பாஜக, ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள் மற்றும் அவரது ...

கோவை பேரூர் தீத்திப்பாளையத்தை சேர்ந்தவர் கலைசெல்வன் (வயது 65). இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று அவர் தனது மொபட்டை வீட்டின் முன்பு நிறுத்தி உள்ளே சென்றார். சிறிது நேரம் கழித்து வெளியே வந்து பார்த்த போது அவரது மொபட் காணவில்லை. இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தில் தேடி ...