தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட கோவை இளைஞர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது..!

கோவையில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

கோவை மாவட்ட துடியலூர் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் தொடர் வழிப்பறி ஈடுபட்டு வந்த கோவை கணபதியைச் சேர்ந்த காட்சன் என்பவரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்து இருந்தனர். இவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பரிந்துரை செய்தார். மாவட்ட ஆட்சியர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்ததை அடுத்து காட்சன் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.