கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள பாரதி வீதியில் தனியார் மருத்துவமனை உள்ளது. இங்கு கேஷியராக வேலை பார்ப்பவர் ஆறுமுகம் ( வயது 72) இவர் நேற்று பணியில் இருந்தார். அப்போது பொள்ளாச்சி ராஜாமில் ரோட்டை சேர்ந்த அருண் கார்த்திக் (வயது 22) என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தனது மனைவி நித்யாவை பார்க்க வந்தார்.அப்போது அவர் குடிபோதையில் இருந்தார். இதனால் அவரை மருத்துவமனை ஊழியர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை. இதில் ஆத்திரமடைந்த அருண் கார்த்திக் அங்கிருந்த கேஷியர் ஆறுமுகத்தை தாக்கி மருத்துவமனை கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினார் . இதை தட்டி கேட்டவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இந்த தாக்குதலில் காயமடைந்த ஆறுமுகம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து மகாலிங்கபுரம் போலீசில் புகார் .சப் இன்ஸ்பெக்டர் இளையராஜா வழக்கு பதிவு செய்து அருண் கார்த்திகை கைது செய்தனர் .இவர் மீது தாக்குதல் , கொலை மிரட்டல் ;சேதப்படுத்துதல் உட்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.