கோவை காந்திபுரத்தில் உள்ள மத்திய சிறை வளாகத்தில் அனுமதி இல்லாமல் வெளிநபர்கள் உள்ளே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று இரவில் ஒருவர் அத்துமீறி உள்ளே புகுந்தார். அவரை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய ஆயுதப்படை போலீசார் பிடித்து சிறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.இதுகுறித்து மத்திய சிறை ஜெயிலர் சிவராஜ் ரேஸ்கோர்ஸ் போலீசுக்கு தகவல் ...

கோவை கணபதி அத்திப்பாளையம் பிரிவில் உள்ள பாவையர் நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மனைவி பத்மா ராணி( வயது 37) இவர் கோவை அரசு மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு அவரது வீட்டில் அவர் அணிந்திருந்த 5 பவுன் செயினை கழட்டி வைத்து விட்டு தூங்க சென்று விட்டார் . காலையில் ...

கோவை சிவானந்த காலனி வி,சி.கே. என். லேஅவுட் சேர்ந்தவர் சேகர். இவரது மகன் அஜித்குமார் (வயது 23 )செல்போன் கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று காந்திபுரம் பாரதியார் ரோட்டில் நின்று கொண்டிருந்தார். அப்போது புல்லட் பைக்கில் வந்த ஒரு ஆசாமி இவரிடம் கத்தியை காட்டி மிரட்டி சட்டை பையில் இருந்து ரூ. 1850 -ஐ ...

கோவை : மராட்டிய மாநிலம் புனேவை சேர்ந்த 30 வயதான பெண் இன்ஜினியர் ஒருவர் தனது பெற்றோர்களுடன் கோவை புதூரில் வசித்து வருகிறார் .இவர் தற்போது கோவையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் புனேவில் வசித்த போது அங்கு தனியார் நிறுவனத்தில் நிதி ஆலோசராக வேலை செய்து வந்த அதே பகுதியைச் ...

கோவை அருகே உள்ள சூலூர் ராமசாமி பிள்ளை வீதியை சேர்ந்தவர் சையத் அலி. இவரது மனைவி ஹாஜாரா பேகம் ( வயது 42 )இவர் நேற்று காலை சூலூரில் இருந்து உடுமலையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக அரசு பஸ்சில் ஏறி பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது பஸ்சில் அவருக்கு அருகில் ஒரு பெண் ...

கோவை ஆர் .எஸ். புரம் தியாகி குமரன் வீதியில் பெட்டிக்கடை நடத்தி வருபவர் செந்தில்குமார் ( வயது 28) இவரது கடையில் நேற்று ஆர் .எஸ். புரம் போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள் . அப்போது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 கிலோ 800 கிராம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக செந்தில்குமார் கைது ...

கோவை மாவட்டம் சூலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பூட்டி இருந்த வீடுகளை கண்காணித்து வீட்டின் பூட்டை உடைத்து தொடர் கொள்ளை நடந்து வந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய எதிரிகளை விரைந்து கண்டுபிடிக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், உத்தரவின் பேரில், கருமத்தம்பட்டி உட்கோட்டதுணை காவல் கண்காணிப்பாளர் ஆனந்த ஆரோக்கியராஜ் ...

கோவை கணபதி அடுத்த காமராஜபுரம் பகுதியில் வசித்து வருபவர் சுகந்தராம் (வயது 22). கடந்த ஆண்டு பிரதீப் என்பவரை சில நபர்கள் அரிவாளால் வெட்டி உள்ளனர். அதற்காக கோர்ட்டில் சாட்சி சொல்வதற்காக நேற்று காலை சுகந்தராம் கோவை கோர்ட் வளாகத்திற்கு வந்துள்ளார். அப்போது சுகந்தராமுடன் அவரது நண்பர்கள் சிலரும் வந்துள்ளனர். அதிகமான நபர்கள் கோர்ட்டில் நிற்பதாக ...

கோவை துடியலூர் அருகே உள்ள தொப்பம்பட்டி டேனியேல் நகரைச் சேர்ந்தவர் கிறிஸ்தவ மதபோதகர் சுதாகர் (வயது 52). இவரது ஆலயத்திற்கு வரும் குடும்பத்தினரின் வீடுகளுக்கு கிறிஸ்துமஸ் பவனிக்காக செல்வது வழக்கம். அதற்காக காரை பயன்படுத்தி வந்தார். இவரது காரை ஓட்டுவதற்காக டிரைவர் வேண்டும் என சமூக வலைதளத்தில் பதிவு செய்து இருந்தார். அப்போது மணி என்பவர் ...

கோவை ஒண்டிப்புதூர் அடுத்த காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 59 ).இவர் தனியார் மில்லில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இரவு நாகராஜ் தனது நாயை அழைத்துக் கொண்டு நடந்து சென்றார் .அப்போது அங்கு குடிபோதையில் நின்று கொண்டிருந்த சில வாலிபர்களை பார்த்து நாய் குரைத்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த ...