கோவை:மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை காமராஜர் ரோடு வேதத்திரி நகர் பகுதியை சேர்ந்தவர் ரங்கராஜ் (வயது 75). இவரது குலதெய்வ கோவிலான மாசணி அம்மன் கோவில் காரமடை எடுத்த திம்மம்பாளையத்தில் உள்ளது. இந்த கோவில் திறந்த வெளியில் மேடை அமைத்து திம்மம்பாளையம் முதல் கேரள மாநிலம் அட்டப்பாடி வரை உள்ள 33 கிராம மக்களின் குலதெய்வமாக இந்த ...
கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸில் நேற்று இரவு துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில், குறைந்தது 10 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு, துப்பாக்கி கலாசாரமே காரணம் என பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர். லாஸ் ஏஞ்சல்ஸ் மான்டேரி பூங்காவில் சீன சந்திர புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது இந்த அசம்பாவிதம் அரங்கேறியுள்ளது. ...
கடந்த 4 ஆண்டுகளில் பாகிஸ்தான் நாட்டில் 42 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக, பாகிஸ்தான் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் முர்தாசா ஜாவேத் அப்பாசி அறிவித்துள்ளார். இதுகுறித்த அந்நாட்டு நாடாளுமன்றத்தில், “பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்த 15 பத்திரிகையாளர்கள், சிந்துவை சேர்ந்த 11 பத்திரிகையாளர்கள், கைபர் பக்துன்க்வாவைச் சேர்ந்த 13 பத்திரிகையாளர்கள், பலுசிஸ்தானைச் சேர்ந்த 3 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். ...
கோவை வீரையம்பாளையம் அருகே உள்ள காந்தி வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 47). லோடு வேன் டிரைவர். சம்பவத்தன்று இவர் நேரு நகர் காளப்பட்டி ரோட்டில் கட்டிட மேஸ்திரி மணிகண்டன் என்பவருடன் லோடு வேனில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் தான் மறைத்து வைத்து இருந்த பெட்ரோலை ரவியின் மீது ...
கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் தீவிர கஞ்சா, குட்கா வேட்டை நடந்து வருகிறது.இந்த நிலையில் சுல்தான்பேட்டை அருகே உள்ள சித்தநாயக்கன்பாளையம், பஸ் நிறுத்தம் பகுதியில் கஞ்சா சாக்லேட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக சுல்தான்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் சிவகுமார் விரைந்து சென்று சித்தநாயக்கன்பாளையம் பஸ் ...
கோவை சிங்காநல்லூர் திருச்சி ரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூட சந்திப்பில் நேற்று தனியார் பஸ் டிரைவர்கள் – கண்டக்டர்கள் தகராறு செய்து கொண்டனர். “டைமிங்” தொடர்பாக இந்த மோதல் ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது .இது குறித்து சிங்காநல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கபட்டது.சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஒரு கோஷ்டியை ...
கோவை கரும்பு கடையை சேர்ந்தவர் மன்சூர் ரகுமான் (வயது 24). எலக்ட்ரீசியன். இவர் சம்பவத்தன்று தனது தம்பியுடன் உக்கடம் புல்லுகாடு அடுக்கு மாடி குடியிருப்புக்கு நண்பரை பார்க்க சென்றார். அங்கு ஒரு பேக்கரி அருகே தனது நண்பரை சந்தித்து பேசிக் கொண்டு இருந்தார். அப்போது நண்பரின் சகோதரர் சாருக்கான் என்பவர் அங்கு வந்து திடீரென மன்சூர் ...
கோவை அருகில் உள்ள குனியமுத்தூர் பி .கே. புதூர் ,குளத்துப்பாளையம் ரோட்டில் உள்ள ராமானுஜம் நகரில் வசிப்பவர் விஜய் வெங்கடாசலபதி ( வயது 19) இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று காலையில் வீட்டை பூட்டிவிட்டு கல்லூரிக்கு சென்று விட்டார். மாலையில் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் ...
கோவை புலியகுளம், அம்மன் குளம், அலமேலுமங்கம்மாள் லேஅவுட்டை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் .இவரது மகன் சாலினி (வயது 23) இவர் பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கணக்காளராக வேலை பார்த்து வருகிறார் .நேற்று அரசு டவுன் பஸ்சில் தாமு நகரிலிருந்து பாப்பநாயக்கன்பாளையத்துக்கு சென்று கொண்டிருந்தார் . புலிகுளத்துக்கும்-லட்சுமி மில் சந்திப்புக்கும் இடையே பஸ் சென்ற போது ...
கோவை சவுரிபாளையம், கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் பாபு என்ற கோபி (வயது 40) இவர் பொங்கல் பண்டிகைக்காக உடையாம்பாளையத்தில் கடை நடத்திவரும் பவித்திரன் என்பவரிடம் ரூ 32,490 ஆயிரத்துக்கு தேங்காய் எண்ணெய் ,கடலை எண்ணெய் வாங்கினார். ஆனால் அதற்குரிய பணத்தை கொடுக்கவில்லை. அதேபோன்று இவர் அன்னூரைசேர்ந்த தனபால் என்பவரிடம் ரூ 1 லட்சத்து, 10ஆயிரத்துக்கு தேங்காய் ...













