தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் நகை திருட்டு – கோவையில் மர்ம நபர்கள் கைவரிசை..!

கோவை மசக்காளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் இளையதாசன் (வயது 34). இவர் புனேவில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், கோவையில் இருந்த அவரது மனைவி சசி (29), பொங்கல் பண்டிகையை கொண்டாட கடந்த 13-ந் தேதி தனது சொந்த ஊரான கடலூருக்கு சென்றார்.
பின்னர் 17-ந் தேதி கோவை திரும்பினார். வீட்டிற்கு சென்று பார்த்த போது அவர் வீட்டில் பேக்கில் வைத்திருந்த வளையல், செயின், பிரேஸ்லெட் போன்ற 8 பவுன் தங்க நகைகளை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர்.

இது குறித்து அவர் புனேவில் உள்ள தனது கணவரிடம் தெரிவித்தார். அவர் அங்கிருந்து கோவை திரும்பினர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு போது எப்படி? திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.