இந்திய சுதந்திரத்தின் 75 வது ஆண்டைக் கொண்டாடும் வகையில் கோவை சிறையில் நன்னடத்தை கைதிகள் 1 பெண் உள்பட 13 பேர் விடுதலை

இந்திய சுதந்திரத்தின் 75 வது ஆண்டைக் கொண்டாடும் வகையில் கோவை சிறையில் நன்னடத்தை கைதிகள் 1 பெண் உள்பட 13 பேர் விடுதலை

இந்திய சுதந்திரத்தின் 75 வது ஆண்டைக் கொண்டாடும் வகையில் தமிழக சிறைகளில் இருந்து 60 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனா்.

இந்நிலையில் கோவை மத்திய சிறையில் தண்டனை கைதிகள் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர். தண்டனை அனுபவித்து வரும் கைதிகளை விதிமுறைக்கு உள்பட்டு விடுதலை செய்யலாம் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

தமிழகத்தில் மத்திய சிறைகளில் சிறு, சிறு குற்ற வழக்கில் கைது செய்து தண்டனை கைதியாக அடைக்கப்பட்டு இருந்த கைதிகளை விடுதலை செய்வதற்கு அடையாளம் காண்பதற்கு விதிமுறைகள் வகுக்கப்பட்டன. இதில், சிறையில் உள்ள கைதிகள், நன்னடத்தையுடன் இருக்கும் கைதிகள் விடுதலை செய்யப்படுவதற்கு தகுதியானவா்கள் என அடையாளம் காணப்பட்டது.

முன்விடுதலை அளிக்கப்படும் கைதிகளின் விவரங்களை சிறைத் துறை டி.ஜி.பி, சிறைத் துறை தலைமையிடத்து டி.ஐ.ஜி உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் ஆய்வு செய்தனா். இந்த ஆய்வில் இறுதி செய்யப்பட்ட கைதிகளை முன் விடுதலை செய்வதற்கு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இந்த பரிந்துரையை ஏற்று கைதிகளை முன்விடுதலை செய்ய அனுமதி வழங்கியது. இந்த பரிந்துரை செய்யப்பட்ட கைதிகள், மாநிலம் முழுவதும் உள்ள 9 மத்திய சிறைகளில் இருந்து 60 கைதிகள் விடுதலை செய்யப்பட்டு உள்ளனா். இதில் கோவை மத்திய சிறையில் மொத்தம் ஒரு பெண் கைதி உள்பட 13 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனா். பரிந்துரை செய்யப்பட்ட பிற கைதிகள், அடுத்தடுத்த விடுவிக்கப்படுவா் என சிறைத் துறையினா் தெரிவித்தனா்.