தொழில் போட்டி: அதிவேகமாக இயக்கி மோதி கொண்ட தனியார் பேருந்துகள் – அதிர்ச்சியில் கோவை பயணிகள்

தொழில் போட்டி: அதிவேகமாக இயக்கி மோதி கொண்ட தனியார் பேருந்துகள் – அதிர்ச்சியில் கோவை பயணிகள்

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பொது மக்களின் தேவையை பூர்த்தி செய்ய அதிக பேருந்துகள் தேவைப்படுகிறது. இந்நிலையில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து காந்திபுரம், உக்கடம், கோவை புதூர் வழியாக இயங்கும் தனியார் பேருந்து ஒன்றும், சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து காந்திபுரம் செல்லும் மற்றொரு தனியார் பேருந்து தொழில் போட்டி காரணமாகவும், பயணிகளின் எண்ணிக்கை அதிகப்படுத்தும் நோக்கத்துடன் ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டுக் கொண்டு அதிவேகத்துடன் சென்றது. இந்நிலையில் அந்த இரண்டு பேருந்தும் பீளமேடு பகுதியில் சென்ற போது நடு ரோட்டில் உரசி கொண்டு மோதிய சம்பவம் பயணிகளை அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் அங்கு வந்த போக்குவரத்து பெண் காவலர் அந்த இரண்டு பேருந்துகளின் நடத்துனர் மற்றும் ஓட்டுநர்களிடம் விசாரணை நடத்தினார்.

இந்நிலையில் பேருந்துகள் மோதிக் கொண்டு நிற்கும் செல்போன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது:

பொதுமக்களுக்கு உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த வகையிலும் சாலையில் செல்லும் போது மக்களை அச்சுறுத்தும் வகையில் பேருந்துகளை இயக்கும் இதுபோன்ற தனியார் பேருந்துகளின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும். மேலும் அந்த ஓட்டுநர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டால் மட்டுமே இது போன்ற குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் பொதுமக்களின் உயிரை பாதுகாக்க முடியும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.