சமீப நாட்களாக நாடு முழுவதும் காய்ச்சல், சளி, இருமல் தொல்லை தீவிரமாக பரவி வருகிறது. குறிப்பாக ஒரு முறை காய்ச்சல் வந்தால் ஒரு வாரத்திற்கு மேலாக இருமல், சளி, உடல் வலி நீடிப்பதாக பலரும் தெரிவித்து வருகின்றனர். இந்த காய்ச்சல் குறித்து சுகாதாரத்துறை தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்திய மருத்துவ கூட்டமைப்பு(IMA) சுற்றிக்கை ...

தைவானை அச்சுறுத்துவதற்காக 25 போர் விமானங்கள் மற்றும் 3 போர் கப்பல்களை சீனா அனுப்பியதாக தைவானின் பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தைவான் அதிகாரபூர்வமான தனிநாடாக செயல்பட்டு வந்தாலும் கூட சீனாவின் செயல்கள் தைவானை சொந்தம் கொண்டாடும் நோக்கத்திலேயே உள்ளது. அமெரிக்காவுடன் தைவான் நெருக்கமாக இருப்பது சீனாவை கோபத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில் தைவானை அச்சுறுத்தும் வகையில் ...

சென்னை தாம்பரம் சேலையூர் காவல் நிலையம் அருகே வீட்டில் வைத்து கஞ்சா செடி வளர்த்து வந்த நான்கு பேர் போலீசாரிடம் சிக்கியுள்ளனர். தனி லேப் அமைத்து உயர்ரக கஞ்சா வளர்த்து விற்பனை செய்து வந்த நபர் சிக்கியது எப்படி? சென்னையில் உள்ள ரிசாட்டுகள் மற்றும் கேளிக்கை விடுதிகளில் விலை உயர்ந்த கஞ்சா மற்றும் போதை ஸ்டாம்புகள் ...

ராமேஸ்வரம்: கடந்த 109 ஆண்டுகளாக இயங்கி வந்த பாம்பன் ரயில் பாலம் நிரந்தரமாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை, புயல் என பல்வேறு இயற்கை சீற்றங்களை சந்தித்த பாம்பன் பாலம் வலுவிழந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 1913 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் பாம்பன் பாலம் கட்டி முடிக்கப்பட்டது. பாலத்தின் கட்டுமானம் ...

சென்னை; தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ரவுடிகள் மற்றும் குற்றவாளிகளைப் பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பிப்.28 முதல் மார்ச் 9-ம் தேதி வரை 10 நாட்கள் ஆபரேஷன் பிடியாணை என்ற நடவடிக்கையை டிஜிபி சைலேந்திரபாபு மேற்கொண்டுள்ளார். நிலுவையிலுள்ள அனைத்து நீதிமன்ற பிடியாணைகளையும் நிறைவேற்றுமாறு அனைத்து மாநகர காவல் ஆணையர்களுக்கும் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கும் டிஜிபி சைலேந்திரபாபு ...

பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதைத் தொடர்ந்து கடந்தாண்டு ஏற்பட்ட வெள்ள பெருக்கும் பெரும் பாதிப்பை உண்டாக்கியது. இது பண வீக்கத்திற்கு காரணமாக அமைந்தது. விலைவாசி உயர்வு, பணவீக்கம் ஆகியவற்றால் திணறி வரும் பாகிஸ்தான், வரும் மாதத்தில் மேலும் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் எனவும் பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பெட்ரோல், ...

கொள்ளையடித்த பணத்தில் கோவா சென்று 13 மாடல் அழகிகளுடன் உல்லாச நடனமாடிய கொள்ளை கும்பலைச் சேர்ந்த தலைவனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை சவுகார்பேட்டையில் கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி அதிகாலை ஆந்திராவில் இருந்து நகை வாங்குவதற்காக வந்த நகை வியாபாரிகளான சுப்பாராவ் மற்றும் ரகுமான் ஆகிய இருவரிடமிருந்து ஒரு கும்பல் போலீஸ் எனக்கூறி, அவர்கள் ...

அம்மாவால் அடையாளம் காட்டப்பட்டவர்களை எல்லாம் கட்சியிலிருந்து வெளியேற்றி, ஒரு துதிபாடும் கூட்டத்தை தன் பக்கத்தில் வைத்துக்கொண்டு மனம்போன போக்கில் செயல்பட்டு வருகின்ற காரணத்தால்தான், ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தலில் கழகம் படுதோல்வியை சந்தித்து உள்ளது என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 66 ஆயிரம் வாக்குகள் ...

இந்தியா முழுவதும் வங்கி ஊழியர்களுக்கு இனி வாரத்துல அஞ்சு நாள் தான் வேலை நாட்கள். அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை தினங்களாக அறிவிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக வங்கி ஊழியர்கள் சங்கம் கோரிக்கை வைத்து வருகின்றன. இந்நிலையில், இந்த கோரிக்கை விரைவில் நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. வார நாட்களில் அவர்களது பணி நேரம் ...

கடலுார் : ‘இந்த ஆண்டு, மே மாதம் வரை, இயல்பை விட அதிக வெயில் இருக்கும்’ என, சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.கடலுார் தனியார் கல்லுாரி நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் நிருபர்களிடம் கூறியதாவது:பருவ நிலை மற்றும் கால நிலை மாற்றம் காரணமாக கடல் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. ...