தைவானில் திடீரென பறந்த 25 போர் விமானங்கள்.. கதிகலங்க வைக்கும் சீனா… போர் மூளும் ஆபத்து ..!

தைவானை அச்சுறுத்துவதற்காக 25 போர் விமானங்கள் மற்றும் 3 போர் கப்பல்களை சீனா அனுப்பியதாக தைவானின் பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தைவான் அதிகாரபூர்வமான தனிநாடாக செயல்பட்டு வந்தாலும் கூட சீனாவின் செயல்கள் தைவானை சொந்தம் கொண்டாடும் நோக்கத்திலேயே உள்ளது. அமெரிக்காவுடன் தைவான் நெருக்கமாக இருப்பது சீனாவை கோபத்திற்கு உள்ளாகியுள்ளது.

இந்நிலையில் தைவானை அச்சுறுத்தும் வகையில் 25 போர் விமானங்கள் மற்றும் 3 போர் கப்பல்களை சீன தைவானை நோக்கி அனுப்பி வைத்துள்ளது. இது குறித்து தைவான் பாதுகாப்பு துறை அமைச்சகம் கூறுகையில், சீனாவின் 19 போர் விமானங்கள் தைவானின் வான்வெளியில் நுழைந்தது.

இதே போல் சீனாவின் போர்க்கப்பல்களும் தைவானில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. தைவான் போர் விமானங்கள், கப்பல்கள் மற்றும் கடலோர பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகள் மூலமாக நெருக்கமாக கண்காணித்து பதிலடி கொடுத்து வைக்கின்றோம் என்றார். இது அந்நாட்டு மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.