இனி வாரத்துல அஞ்சு நாள் மட்டும் தான் வேலை.. சனி, ஞாயிறுகளில் விடுமுறை – வங்கி ஊழியர்களுக்கும் செம குட் நியூஸ்..!

ந்தியா முழுவதும் வங்கி ஊழியர்களுக்கு இனி வாரத்துல அஞ்சு நாள் தான் வேலை நாட்கள். அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை தினங்களாக அறிவிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக வங்கி ஊழியர்கள் சங்கம் கோரிக்கை வைத்து வருகின்றன.

இந்நிலையில், இந்த கோரிக்கை விரைவில் நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. வார நாட்களில் அவர்களது பணி நேரம் அதிகரிக்கப்பட உள்ளது. அரசு மற்றும் தனியார் வங்கிகள் செயல்படும் நாட்கள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. வங்கி ஊழியர்கள் வாரத்தின் 5 நாட்கள் மட்டுமே பணி நாளாக இருக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனை விரைவில் நடைமுறைப்படுத்தும் சாத்தியக்கூறுகளை பரிசீலித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தினசரி வேலை நேரத்தை அதிகரிக்கவும் திட்டமிட்டு வருகின்றன.

இதனை வங்கி ஊழியர் சங்கங்கள் வரவேற்றுள்ளனர். தற்போதைய நடைமுறைப்படி மாதத்தின் 2 மற்றும் 4ம் சனிக்கிழமைகளில் மட்டும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. வெகுவிரைவில் அனைத்து சனிகளும் விடுமுறையில் சேர இருக்கின்றன.

வங்கி ஊழியர்களின் பணித்திறன் மேம்பாடு மற்றும் மனிதவள பரிந்துரைகளுக்காக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. பல்வேறு நிறுவனங்களும் இந்த 5 வேலைநாள் திட்டத்தில் சேர்ந்து வருகின்றன. அந்த வகையில் வங்கிகளும் சேர உள்ளன. தினசரி வேலை நேரத்தில் 40 நிமிடங்கள் கூடுதலாக பணிபுரிவதன் மூலம், மாதத்தின் 2 கூடுதல் சனி விடுமுறைகளை ஈடுசெய்ய திட்டமிடப்பட்டு வருகிறது.

இதற்கு ரிசர்வ் வங்கி ஏற்கனவே சம்மதம் தெரிவித்துள்ளது. இந்த நடைமுறை அமலுக்கு வரும் பட்சத்தில் பங்குச்சந்தைகள் பாணியில் வாரத்தில் 5 நாள் மட்டுமே வங்கிகளும் செயல்படும். அதே நேரத்தில் பணப்புழக்கத்தை குறைத்து டிஜிட்டல் பரிவர்த்தனைகளை அதிகப்படுத்தவும் ஆர்பிஐ செயல்பாடுகளை முடுக்கி விட்டுள்ளது. அதன்படி ஏடிஎம்களின் எண்ணிக்கை, ஏடிஎம் மையங்களிலேயே பணம் செலுத்தும் வசதி, மற்றும் பாஸ்புக் அச்சிடும் வசதி என வாடிக்கையாளருக்கான பரவலான வங்கிப் பணிகள், சுயசேவை பிரிவுகளை அதிகப்படுத்தவும் திட்டமிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.