இந்த ஆண்டு சுட்டெரிக்கப்போகுது கோடை வெயில்… பாதுகாக்க எளிய டிப்ஸ் இதோ..!!

டலுார் : ‘இந்த ஆண்டு, மே மாதம் வரை, இயல்பை விட அதிக வெயில் இருக்கும்’ என, சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.கடலுார் தனியார் கல்லுாரி நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் நிருபர்களிடம் கூறியதாவது:பருவ நிலை மற்றும் கால நிலை மாற்றம் காரணமாக கடல் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.
அதிகபட்ச வெப்ப நிலை பதிவாகும் நாட்கள் கடந்த காலங்களை விட தற்போது அதிகரித்து வருகிறது. ஜனவரி, பிப்ரவரி மாதங்களை நாம் குளிர்காலங்களாக கருதுவோம். ஆனால் இந்த ஆண்டு, 122 ஆண்டுகளில் இல்லாத அளவில், பிப்ரவரியில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது.தற்போது கோடை துவங்கினாலும், இரவு நேரங்களில் குளிர் அடிக்கிறது. அதிகாலையில் பனிப்பொழிவு உள்ளது.
இந்த பருவநிலை மாற்றம் காரணமாக இருமல், காய்ச்சல், மூட்டு வலி போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.மார்ச் முதல் மே மாதம் வரை உள்ள காலகட்டத்தை நாம் கோடை காலமாக கருதுவோம். இந்த காலகட்டத்தில் கடலோர மாவட்டங்களில் அதிக அளவு வெப்பநிலை பதிவாக வாய்ப்பு உள்ளது.இதில் இருந்து நம்மை காத்துக்கொள்ள தண்ணீர், பழச்சாறு, பழங்கள் உள்ளிட்டவற்றை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். குழந்தைகள் விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.முதியவர்கள் காலை 11:00 மணி முதல் மாலை 4:00 வரையில், வெளியில் வருவதை தவிர்ப்பது நல்லது.

டாக்டர்கள் ஆலோசனைப்படி கண் கண்ணாடிகள் அணிவது நல்லது.வானிலையை கனிப்பதற்கு நம்மிடம் நவீன கருவிகள் உள்ளது. கடந்த ஆண்டுகளில் நாம் இதில் நல்ல வளர்ச்சி கண்டுள்ளோம். அதையும் மீறி எதிர்பாராமல் நடப்பதை தவிர்க்க முடியாது. அதற்கேற்ப நம்மை தயார் படுத்திக்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.