காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தாமல் பகுதியில் விபத்து ஏற்படுத்தி, தனக்குத்தானே காயம் ஏற்படுத்திக் கொண்ட வழக்கில் பிரபல யூட்யூபர் டி.டி.எஃப். வாசன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, கடந்த 19ஆம் தேதி காஞ்சிபுரம் பாலு செட்டி சத்திரம் போலீசாரால் கைது செய்யப்பட்டு அக்டோபர் 3ம் தேதி ...

புதுடெல்லி: தேர்தல் பத்திரம் திட்டம் சட்டப்பூர்வமானது. இந்த திட்டத்தில் எந்தவொரு சட்ட விதிகளும் மீறப்படவில்லை. யாருடைய உரிமையும் மீறப்படவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. கடந்த 2017-18-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் தேர்தல் பத்திரம் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் கடந்த 2018-ம் ஆண்டில் அமலுக்கு வந்தது. இதன்படி பாரத ஸ்டேட் ...

மின் அட்டையுடன் ஆதார் இணைக்க கட்டாயம் என்ற தமிழ்நாடு அரசின் அரசாணைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவுக்கு 6 வாரத்தில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. முதல் 100 யூனிட் மின்சாரத்துக்கான கட்டணத்தை அரசு மானியமாக வழங்குகிறது. இந்த மானியத்தைப் ...

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனு நவம்பர் 6ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்தது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஜூன் மாதம் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில், ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. சிறையில் உடல் நிலை பாதிக்கப்பட்டு ஸ்டான்லி ...

முத்துராமலிங்க தேவரின் 116 வது ஜெயந்தியும், 61வது குருபூஜை விழாவும் இன்று கொண்டாடப்படும் நிலையில் தமிழக முதல்வர் கோரிப்பாளையத்தில் முதல் நிகழ்வாக தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ், பி. மூர்த்தி, பி.டி.ஆர், கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், டி.ஆர்.பி ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர். பின்னர் சாலை ...

மதுரை கோரிப்பாளையம் பசும்பொன் தேவர் திருமகனார் சிலைக்கு அவரது 116 வது ஜெயந்தி மற்றும் 61 வது குரு பூஜையை முன்னிட்டு மாலை அணிவித்து, மரியாதை செலுத்திய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் உடனிருந்தார். அப்போது பிரமோத் சாவந்த் கூறுகையில், இந்திய சுதந்தர வரலாற்றில் தமிழகத்தைச் ...

தமிழகத்தில் சுற்றுச் சூழல் விதிகளை மீறி அதிக அளவில் மணல் அள்ளப்பட்டு, வரி ஏய்ப்பு செய்து, முறைகேடாக மணல் லாரி உரிமையாளர்களுக்கு விற்பனை செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் , சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த செப்டம்பர் மாதம் வழக்கு பதிவு செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் சட்டவிரோத ...

கோவை செல்வபுரம் கல்லா மேடு,தெற்கு அவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் சுரேஷ் ( வயது 33) .இவர் அந்த பகுதியில் 27 ஆடுகள் வளர்த்து வருகிறார். இந்த நிலையில் அவரது ஆட்டு பட்டியில் இருந்த 2 ஆடுகளை காணவில்லை.யாரோ இரவில் திருடி சென்று விட்டனர்.இதன் மதிப்பு ரூ.40, ஆயிரம் இருக்கும். இதுகுறித்து சுரேஷ் செல்வபுரம் போலீசில் புகார் ...

கோவை போத்தனூர் பக்கம் உள்ள வெள்ளலூர் அவுசிங் யூனிட் பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக போத்தனூர் போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் நடேசன், சப் இன்ஸ்பெக்டர் யூசுப் ஆகியோர் அந்தப் பகுதியில் நேற்று மாலை ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் ...

கோவை அருகே உள்ள அரசூர் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவர் நேற்று தனது நண்பர் மாரிசெல்வத்துடன் சங்கோதிபாளையம் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது சஞ்சய்கண்ணன் சந்தான குமார் ஆகியோர வழிமறித்து அரிவாளால் விக்னேஷ் ,மாரிசெல்வம் ஆகியோரை வெட்டினார்கள்.இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து சூலூர் போலீசில் புகார் ...