நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து பெரிதும் விவாதிக்கப்பட்டு வந்த நிலையில், புதிய அரசியல் கட்சியை அவர் தொடங்கியுள்ளார். தனது அரசியல் கட்சிக்கு ‘தமிழக வெற்றி கழகம்’ என விஜய் பெயரிட்டுள்ளார். கட்சியை இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் சமுதாயத்துக்கும் முழுமையாக உதவ வேண்டும் ...

விஜய்யின் கட்சி பெயரில் திராவிடம் என்று இல்லாததே பெரிய மாறுதல் தான். அதனை நான் வரவேற்கிறேன்” என்று சீமான் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் புதிதாக தொடங்க இருக்கும் கட்சியின் பெயரை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதற்காக விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் டெல்லி சென்றிருந்தார். இந்த நிலையில், ‘தமிழக ...

தி.மு.க. கூட்டணி குறித்த பேச்சு வார்த்தை சுமூகமாக தொடங்கி திடீரென இழுபறியாகவே இருந்தது.தொகுதிகளை குறைக்க வேண்டும் என தி.மு.க.வலியுறுத்தியும், வி.சி.க., ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட கேட்டதும் இழுபறிக்கு காரணம். இடதுசாரிகளின் எண்ணிக்கை குறைந்ததால் முட்டுக்கட்டை தொடர்ந்தது.காங்கிரசுக்கும் கேட்ட அளவில் பாதி கூட கிடைக்காததால் இழுபறி ஏற்பட்டது. இந்நிலையில், கூட்டணி கட்சிகளுக்கு இடையே ...

டெல்லி: அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு எதிராக ஹேமந்த் சோரன், உயர்நீதிமன்றத்தை நாட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜார்க்கண்டில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா(ஜேஎம்எம்), காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தள கூட்டணி ஆட்சி நடைபெற்றது. ஜேஎம்எம் கட்சி தலைவர் ஹேமந்த் சோரன் முதல்வராக இருந்து வந்தார். இவர் மீதான நில மோசடி , சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பான ...

தமிழக குடிநீர் வடிகால் துறை அமைச்சர் கே என் நேருவுக்கு எதிராக திருச்சி நீதிமன்றத்தில் உள்ள வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016 ஏப்ரல் மாதம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் பெரியார், அம்பேத்கர், முத்துராமலிங்க தேவர் ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக முன் ...

தமிழகத்தில் மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவுக்கும் அதிகமாக, மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், அதில் கிடைத்த வருமானத்தை, சட்ட விரோதமாக பணப் பரிமாற்றம் செய்ததாகவும் புகார் எழுந்தது. அதைத் தொடர்ந்து, கடந்தாண்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில், நீர்வளத் துறை அதிகாரிகள் மற்றும் மணல் குவாரி அதிபர்களின் வீடுகள் உள்ளிட்ட 34 இடங்களில் சோதனை ...

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது. இந்த பங்களாவிற்குள் கடந்த 2017-ம் ஆண்டு புகுந்த மர்ம நபர்கள், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பணியில் இருந்த காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்தது. ...

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்த பொன்னுசாமி என்பவர் கடந்த 28.12.2013 அன்று பணியின் போது மாரடைப்பால் உயிரிழந்தார். இவருக்கு மனைவி ஆராயி வயது 52 மற்றும் மகள்கள் கவிதா வயது 35, மஞ்சு வயது 33 மற்றும் கௌரி வயது 31 ஆகிய மூவருக்கும் திருமணமாகிவிட்ட நிலையில் பொன்னுச்சாமியின் உயிரிழப்பைத் ...

கோவை அருகே உள்ள ஆலந்துறை பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் இவர் நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி ஆவார். காளப்பட்டி பகுதியில் வசிப்பவர் முருகன். இவர்களது இருவரது வீட்டில் என். ஐ. ஏ அதிகாரிகள் இன்றுசோதனை நடத்தினார்கள். சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு காவல்துறை நடத்திய வாகன சோதனையில் கைதுப்பாக்கி, ...

திருநங்கை வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஐ.டி. ஊழியர் கைது கோவை வடவள்ளி, மருதமலை பத்திரப்பதிவு அலுவலகம் பின்புறம் அன்னை இந்திரா நகர் உள்ளது. இங்குள்ள ஒரு வீட்டில் திருநங்கை ஒருவர் கடந்த 29-ந் தேதி இரவு அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து வடவள்ளி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ...