திமுக – விசிக தொகுதி உடன்பாடு… ஸ்டாலின்,திருமாவளவன் கையெழுத்திட்டு ஒப்பந்தம்.!!

தி.மு.க. கூட்டணி குறித்த பேச்சு வார்த்தை சுமூகமாக தொடங்கி திடீரென இழுபறியாகவே இருந்தது.தொகுதிகளை குறைக்க வேண்டும் என தி.மு.க.வலியுறுத்தியும், வி.சி.க., ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட கேட்டதும் இழுபறிக்கு காரணம்.

இடதுசாரிகளின் எண்ணிக்கை குறைந்ததால் முட்டுக்கட்டை தொடர்ந்தது.காங்கிரசுக்கும் கேட்ட அளவில் பாதி கூட கிடைக்காததால் இழுபறி ஏற்பட்டது.

இந்நிலையில், கூட்டணி கட்சிகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள முறுகல் நிலை காரணமாக முடிவுகள் மாறலாம் என்பதால், நேற்று மாலை விடுதலை சிறுத்தைகள் மற்றும் தி.மு.க. இடையேயான தொகுதி ஒப்பந்தத்தில் திருமாவளவன் கையெழுத்திட இருந்தார்.

இந்நிலையில், கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என்றும் தி.மு.க. தரப்பில் கூட்டணி கட்சிகளுக்கு தகவல் அனுப்பப்பட்டது.மாலை பேச்சு வார்த்தைக்கு ம.தி.மு.க. அழைக்கப்பட்டார்.

இதனிடையே கூட்டணி பேச்சுவார்த்தையில் வி.சி.க-தி.மு.க. உடன்பாடு ஏற்பட்டு 6 தொகுதிகளில் நிற்க முடிவு செய்யப்பட்டது.கூட்டணி ஒப்பந்தத்தில் திருமாவளவன், ஸ்டாலின் இருவரும் கையெழுத்திட்டு ஒப்பந்தம் உறுதியானது.

வி.சி.க சின்னத்தில் 3 தொகுதிகளிலும், தனிச்சின்னத்தில் 3 தொகுதிகளிலும் விசிக நிற்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனிச் சின்னத்தில் 6 தொகுதிகளில் நிற்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இதில் 4 தனித்தனி தொகுதிகள் மற்றும் 2 பொது தொகுதிகள் அடங்கும்.இதன் மூலம் தி.மு.க.வில் த.மு.மு.க., ம.ம.க., வி.சி.க. ஆகிய கட்சிகளின் தொகுதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ம.தி.மு.க.வும் இன்று மாலை உறுதி செய்யப்படும் என்று தெரிகிறது.காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளின் பிரச்சனைகள் குறித்தும் அடுத்த நாட்களில் விவாதிக்கப்படும் என தி.மு.க. தெரிவித்துள்ளது.