திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான்  அதிரடி நடவடிக்கையின் படி தீவிர குற்ற கண்காணிப்பு பிரிவு மற்றும் வாணியம்பாடி , ஆம்பூர் காவல் நிலைய காவலர்கள் அடங்கிய குழு ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி நகர பகுதியில்  காட்டன் சூதாட்டத்தை முற்றிலும் ஒழித்திடவும் மற்றும் அதில் ஈடுபட்டிருந்த முக்கிய குற்றவாளிகளில்  தண்டபாணி (வயது 39), கம்பி ...

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் ஐ ஜி ஈஸ்வரரா வின் உத்தரவின் பேரில் அனைத்து நடை மேடைகளையும் போலீஸ் கட்டுப்பாட்டின் கீழ் எடுத்துக் கொண்டனர். அப்போது ரயிலை விட்டு திபு திபு வென ஓடி வந்தனர். அதில் ஒருவன் மட்டும் கையில் வைத்திருந்த பணப் பையுடன் கீழே விழுந்தான். அதிலிருந்து ...

அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் தனம்மாளுக்கு கிடைத்த ரகசிய தகவல் பேரில் தனது தோற்றத்தையே மாற்றிக் கொண்டு யாருக்கும் சந்தேகம் ஏற்படா வண்ணம் அம்பத்தூரை அடுத்த பட்டறை வாக்கம் ரயில் நிலையம் அருகே தனியாக கண்காணித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு மர்ம ஆசாமி கையில் ஒரு பையுடன் பேந்த பேந்த முழித்துக் கொண்டிருந்தான். தனம்மாள் ...

சந்திரயான் 3 திட்ட இயக்குனர் பி வீரமுத்துவேலுவை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சந்திரயான் -3 இன் லேண்டர் திட்டமிட்டபடி சந்திரனின் தென் துருவப் பகுதியில் வெற்றிகரமாகத் நேற்று (ஆகஸ்ட் 23) தரையிறங்கியதன் மூலம் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி சாதனைப்படைத்துள்ளது. இந்நிலையில் சந்திரயான் 3 திட்ட இயக்குனர் பி வீரமுத்துவேலுக்கு தொலைபேசியில் ...

ஊழலுக்கு எதிராகவும், மோடியை 3ஆவது முறையாக பிரதமராக்க தமிழக மக்களின் ஆதரவை பெறும் நோக்கத்திலும், ‘என் மண், என் மக்கள்’ என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை யாத்திரை மேற்கொண்டுள்ளார். அண்ணாமலையின் யாத்திரையை கடந்த ஜூலை மாதம் 28ஆம் தேதி ராமேஸ்வரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார். ...

சென்னை: முதலமைச்சரின் விரிவுபடுத்தப்பட்ட காலை சிற்றுண்டி திட்டத்தை தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சார்ந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரவர் பகுதியில் தொடங்கி வைக்க வேண்டும் என ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பான விவரம் ...

கோவை: கோவையில் பிரசித்தி பெற்ற ஈச்சனாரி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கோவையில் மிகவும் பழமைவாய்ந்த பிரசித்தி பெற்ற ஈச்சனாரி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்து அறநிலைத்துறைக்கு சொந்தமான இக்கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. பேரூர் ஆதினம் தவத்திரு மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் தவத்திரு குருமரகுருபர ...

தேர்தலில் மக்களின் பங்கேற்பை ஊக்குவிக்க இந்திய தேர்தல் ஆணையத்தின் தேசிய தூதராக சச்சின் டெண்டுல்கா் நியமிக்கப்பட உள்ளாா். இதுதொடா்பாக தேர்தல் ஆணையத்துக்கும் சச்சினுக்கும் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் புதன்கிழமை கையொப்பமாகவுள்ளது. இதையடுத்து, வரும் 3 ஆண்டுகளுக்கு வாக்காளா்களிடம் தேர்தல் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சிகளில் சச்சின் டெண்டுல்கா் ஈடுபட உள்ளாா். இது தொடா்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஆறாவது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் பாதாள சாக்கடை பணி மற்றும் மேட்டுப்பாளையம் மக்களுக்கான குடிநீர் வழங்கும் குழாய்கள் மற்றும் மேட்டுப்பாளையத்தில் இருந்து திருப்பூருக்கு குடிநீர் எடுத்துச் செல்லும் குழாய்பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இது போன்ற பணிகளுக்கு தோண்டப்பட்ட குழியில் முறையான விதத்தில் மூடாத காரணத்தினால் அவ்வப்போது அவ்வழியாக ...

நடிகர் விஜய் தனது விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றுவதற்கு முன் ஒரு முழுநேர அரசியல் படத்தை நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அரசியல் கட்சி தொடங்கவும் முழு நேர அரசியல்வாதியாக மாறவும் நடிகர் விஜய்  பெரிதும் ஆர்வம் காட்டி வருகிறார். அதற்கான வேலைகளையும் தனது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை கொண்டு ...