மேட்டுப்பாளையத்தில் ஆமை வேகத்தில் நடக்கும் பாதாள சாக்கடை பணி : நகராட்சி நிர்வாகம் அலட்சியம் – வீடியோ இதோ.!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஆறாவது வார்டுக்கு உட்பட்ட பகுதியில்
பாதாள சாக்கடை பணி மற்றும் மேட்டுப்பாளையம் மக்களுக்கான குடிநீர் வழங்கும் குழாய்கள் மற்றும் மேட்டுப்பாளையத்தில் இருந்து திருப்பூருக்கு குடிநீர் எடுத்துச் செல்லும் குழாய்பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

இது போன்ற பணிகளுக்கு தோண்டப்பட்ட குழியில் முறையான விதத்தில் மூடாத காரணத்தினால் அவ்வப்போது அவ்வழியாக செல்லும் கனரக வாகனங்கள்
நிலத்தில் பதிக்கப்பட்ட குழாய்கள் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் மற்றும் சாக்கடை
நீர் கலந்து சாலையின் இருபுறத்திலும் துர்நாற்றத்துடன் சாலையில் தேக்கம் அடைந்துள்ளது.

அந்த வழியாக செல்லும் பள்ளி குழந்தைகள், பொதுமக்கள்,
வாகன ஓட்டிகள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் . சாலையில் தேங்கி உள்ள சாக்கடை நீரை கடந்து செல்லும் போது நோய்த் தொற்று உருவாகும் அபாயம் உள்ளது . மிக துர்நாற்றத்துடன் முகச்சுழிப்பை ஏற்படுகிறது என பொதுமக்கள் கூறினார்கள். இரண்டு ஆண்டுகளாக மெத்தனமாக செயல்பட்டு வரும் பணியை மிக விரைவாக செய்து தரும்படி அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் கேட்டுக் கொண்டனர்..