திருப்பத்தூர் காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அதிரடி நடவடிக்கை – காட்டன் சூதாட்ட அமைப்பினர் 5 பேர் கைது.!!

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான்  அதிரடி நடவடிக்கையின் படி தீவிர குற்ற கண்காணிப்பு பிரிவு மற்றும் வாணியம்பாடி , ஆம்பூர் காவல் நிலைய காவலர்கள் அடங்கிய குழு ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி நகர பகுதியில்  காட்டன் சூதாட்டத்தை முற்றிலும் ஒழித்திடவும் மற்றும் அதில் ஈடுபட்டிருந்த முக்கிய குற்றவாளிகளில்  தண்டபாணி (வயது 39), கம்பி கொல்லை என்பவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், தற்போது சுப்பிரமணி (வயது 50)  திருமாஞ்சோலை அன்பு ,ஆம்பூர், யுவராஜ் -உமராபாத், சசி(வயது 50)  நடுப்பற்றை, சங்கர் (வயது 46 ) வாணியம்பாடி ஆகியோர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 6 மூட்டைகள் – 2160 பொம்மை இல்லா சீட்டு கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் நடைபெற்று வந்த 90 சதவீத காட்டன் சூதாட்டத்திற்கு காரணமான அமைப்பினர் ஐந்து பேரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் மாவட்டத்தில் சூதாட்டம், காட்டன் பந்தயம் கள்ளச்சாராயம், கஞ்சா மற்றும் மணல் கடத்தலையும் முற்றிலுமாக ஒழிக்க அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  எச்சரித்துள்ளார்..