கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளுக்காக சாலை மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த சாலை வழியாக வாகனங்களை இயக்க இட வசதி உள்ள போதும் ரவுண்டானா பகுதியில் நடை பயிற்சிக்காக அமைக்கப்பட்டுள்ள நடைபாதையில் வாலிபர்கள் பலர் மோட்டார் சைக்கிளை அதிவேகத்தில் அதிக சத்தம் கொண்ட சைலன்ஸர்களைக் கொண்டு வாகனங்களை இயக்கி வருகின்றனர். ...

கோவையில் மாவட்டத்தில் பஸ் உள்ளிட்ட பொது இடங்களில் மக்கள் தவறவிட்ட சுமார் 106 செல்போன்கள் மீட்கபட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வைத்து செல்போன்களை தவறவிட்டர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் கூறியதாவது கோவை மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களில் ...

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையில் சீதோஷன நிலைக்கு ஏற்ப சின்ன வெங்காயம் பயிரிடப்படுகிறது. தொண்டாமுத்தூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தென்னைக்கு அடுத்தபடியாக சின்ன வெங்காயத்தை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். இது 60 நா பயிராக உள்ளது. தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் 25 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் சின்ன வெங்காயம் பயிரிடப்பட்டு வருகிறது. கடந்த 6 மாத காலமாக விவசாயிகள் அதிக ...

நெல்லையை சேர்ந்தவர் வியாபாரி தனது குடும்பத்துடன் கடந்த 11 மாதத்துக்கு  முன்பு கோவை வந்தார். இவர் கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் தங்கி மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மகள் அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமியின் 26 வயது மாமாவும் இவர்களுடன் தங்கி இருந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று சிறுமி வீட்டில் ...

கோவையை அடுத்த நெகமம் பக்கம் உள்ள காளியப்பம் பாளையத்தைச் சேர்ந்தவர் தர்மராஜ். இவரது மகன் சபரி கார்த்தி ( வயது 27 )இவர் 2018 ஆம் ஆண்டு பி.இ மெக்கானிக்கல் பட்டம் பெற்றார்.அதிலிருந்து வேலை தேடிக் கொண்டிருந்தார் .அவருக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை.இந்த விரக்தியில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் நேற்று தூக்கு போட்டு தற்கொலை ...

கோவை அருகே உள்ள விளாங்குறிச்சி மகாலட்சுமி கார்டனைச் சேர்ந்தவர் சக்தி முருகன். இவரது மனைவி சுதா (வயது 31)இவர் வி. கே .ரோடு, சேரன்மாநகர் காந்திநகர் பகுதியில் துணிக்கடை நடத்தி வருகிறார் .நேற்று முன் தினம் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.இரவில் கடைக்கு பக்கத்தில் வசிக்கும் குமார் என்பவர் சுதாவுக்கு போன் செய்து ...

கோவை கவுண்டம்பாளையம் காமராஜர் நகரை சேர்ந்தவர் கதிரேசன். இவரது மனைவி உஷாராணி (வயது 55)இவர் கோவை உக்கடம் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார் .அதில் கோவை என்.எச் . ரோட்டை சேர்ந்த கார்த்தி ,வீரலட்சுமி, சித்திக் ஆகியோர் அனுமதி இல்லாமல் எலச்சீட்டு நடத்தியதாகவும் .அவர்கள் தன்னிடம் ரூ 2 லட்சம் மோசடி செய்து விட்டதாகவும் கூறியுள்ளார். ...

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பொள்ளாச்சி அருகே குரங்கு நீர்வீழ்ச்சி உள்ளது. கடந்த ஜனவரி மாதம் கொரோனா ஊரடங்கால் நீர்வீழ்ச்சிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. பின்னர் மழை இல்லாததால் நீர்வீழ்ச்சி தண்ணீர் இல்லாமல் வறண்டது. இதனால் சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சிக்கு அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக பெய்த மழையால் குரங்கு நீர்வீழ்ச்சியில் காட்டாற்று ...

கோவை துடியலூர் பக்கம் உள்ள கணுவாய் சிபிசி சாய் அவென்யூ பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 47) இவர் கே .என். ஜி .புதூரில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார் .கடந்த 23ஆம் தேதி இவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்று விட்டார் .நேற்று திரும்பி ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை பக்கம் உள்ள மஞ்ச நாயக்கனூரை சேர்ந்தவர் ராஜு (வயது 46) இவர் பல்லடத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தார். குடிப்பழக்கம் உடையவர். நேற்று இவர் வஞ்சியாபுரம்-குஞ்சி பாளையம் ரோட்டில் அளவுக்கு அதிகமாக மது குடித்து மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் ...