கோவை கவுண்டம்பாளையம் காமராஜர் நகரை சேர்ந்தவர் கதிரேசன். இவரது மனைவி உஷாராணி (வயது 55)இவர் கோவை உக்கடம் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார் .அதில் கோவை என்.எச் . ரோட்டை சேர்ந்த கார்த்தி ,வீரலட்சுமி, சித்திக் ஆகியோர் அனுமதி இல்லாமல் எலச்சீட்டு நடத்தியதாகவும் .அவர்கள் தன்னிடம் ரூ 2 லட்சம் மோசடி செய்து விட்டதாகவும் கூறியுள்ளார். இது குறித்து உக்கடம் போலீசார் கார்த்திக், வீரலட்சுமி, சித்திக், ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Leave a Reply