வேலை கிடைக்காத விரக்தியில் பட்டதாரி இளைஞர் தூக்குபோட்டு தற்கொலை..

கோவையை அடுத்த நெகமம் பக்கம் உள்ள காளியப்பம் பாளையத்தைச் சேர்ந்தவர் தர்மராஜ். இவரது மகன் சபரி கார்த்தி ( வயது 27 )இவர் 2018 ஆம் ஆண்டு பி.இ மெக்கானிக்கல் பட்டம் பெற்றார்.அதிலிருந்து வேலை தேடிக் கொண்டிருந்தார் .அவருக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை.இந்த விரக்தியில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து இவரது தந்தை தர்மராஜ் நெகமம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சரவணபெருமாள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.