கோவை துணிக்கடையில் ஷட்டர் உடைத்து கொள்ளை முயற்சி..!

கோவை அருகே உள்ள விளாங்குறிச்சி மகாலட்சுமி கார்டனைச் சேர்ந்தவர் சக்தி முருகன். இவரது மனைவி சுதா (வயது 31)இவர் வி. கே .ரோடு, சேரன்மாநகர் காந்திநகர் பகுதியில் துணிக்கடை நடத்தி வருகிறார் .நேற்று முன் தினம் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.இரவில் கடைக்கு பக்கத்தில் வசிக்கும் குமார் என்பவர் சுதாவுக்கு போன் செய்து உங்கள் கடையின் பூட்டை 3 பேர் உடைத்து கொண்டு இருக்கிறார்கள் என்று கூறினார். இதை அறிந்ததும் சுதா புறப்பட்டு வந்தார் .அதற்குள் அந்த 3 ஆசாமிகளும் தப்பி ஓடிவிட்டனர்.இதுகுறித்து பீளமேடு போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.