டெல்லி: நாட்டின் 75ஆவது சுதந்திர தினம் இன்னும் சில நாட்களில் கொண்டாடப்பட உள்ள நிலையில், இது தொடர்பாகத் தபால் துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்று இந்தாண்டு உடன் 75 ஆண்டுகள் ஆகிறது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்வை இந்தியா கோலாகலமாகக் கொண்டாடத் திட்டமிட்டு, ஏற்பாடுகளைச் செய்து ...
நாட்டின் 75வது சுதந்திர தினம் வரும் 15ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. குடியரசுத் தினம், காந்தி ஜெயந்தி, சுதந்திர தினம் போன்ற நாட்களில் மதுபான விற்பனை கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்படும். அதன்படி சுதந்திர தினமாக ஆகஸ்ட் 15ம் தேதி சென்னையில் மதுபான கூடங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்தஜோதி ...
ஈமு கோழி நிறுவனம் நடத்தி மோசடி: ஈரோட்டை சேர்ந்த தொழிலதிபருக்கு 10-ஆண்டுகள் சிறை தண்டனை. ஈமு கோழி நிறுவனம் நடத்தி மோசடி செய்த ஈரோட்டை சேர்ந்த தொழிலதிபருக்கு கோவை நீதிமன்றம் 10-ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியுள்ளது. ஈரோடு மாவட்டம் சென்னிமலை காட்டூர் சாலையில் ரோஜா நகர் என்ற பகுதியில் செல்வகுமார் என்பவருக்கு சொந்தமான ஈமு கோழிப் ...
கோவையில் கரும்புகையுடன் தரையிறங்கிய விமானம். கோவை விமான நிலையத்தில் விமானம் ஒன்று கரும்புகையுடன் தரையிறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை விமான நிலைத்திற்கு தினந்தோறும் இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இன்று காலை கோ ஏர்-43 என்ற விமானம் ஒன்று பெங்களூரில் இருந்து 92 பயணிகளுடன் மாலி ...
ஜெனிவா: உக்ரைனில் உள்ள சபோரிஸ்ஷியா அணுமின் நிலையம் மீதான தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையும், சர்வதேச அணுசக்தி கழகமும் எச்சரித்துள்ளன. உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி 24ம் தேதி தாக்குதல்களை தொடங்கிய ரஷ்யா, பல்வேறு மாகாணங்களில் குண்டுமழை பொழிந்து வருகிறது. உக்ரைன் மீதான போர் தொடங்கியதில் இருந்து ரஷ்ய படைகள், ...
சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தீர்ப்பு வரும் பட்சத்தில் 3 விதமான மாற்றங்கள் கட்சியில் நடக்க வாய்ப்புகள் உள்ளன. கடந்த ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவிற்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் தரப்பு தொடுத்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதில் உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயசந்திரன் ...
தைவான் மீது சீனா போர் தொடுக்க கூடும் என்ற நிலையில், சீனாவின் கடும் எதிா்ப்பையும் மீறி அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபைத் தலைவா் நான்சி பெலோசி தைவானுக்கு வருகை தந்து அதிபரை சந்தித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தைவானை சுற்றி சீனாவின் போர்க்கப்பல்கள், போர் விமானங்கள் பயிற்சிகள் மேற்கொண்டன. மேலும் கடந்த 4-ந்தேதி தொடங்கிய ...
இந்தியா-பிரிட்டன் இடையே கையொப்பமாகும் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தின் வாயிலாக வரும் 2030-க்குள் இருநாடுகளுக்கு இடையிலான வா்த்தகம் இரண்டு மடங்கு அதிகரிக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், இந்தியா-பிரிட்டன் இடையிலான வா்த்தகம் கடந்த 2015-இல் 19.51 மில்லியன் டாலராக இருந்த நிலையில், 2022-இல் 31.34 பில்லியன் டாலராக உயா்ந்திருப்பதாகவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்திய தொழில் கூட்டமைப்புடன் ...
வேலூர்: தமிழக அரசால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கையெழுத்திட அழுத்தம் கொடுக்கப்படுவதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் போதைப்பொருள் பழக்கத்தை தடுக்கும் வகையில் மாணவர்கள் விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். இதனையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ...
சென்னை : பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என சர்ச்சைக்குரிய வகையில் பேசிய இந்து முன்னணி பிரமுகர் ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம். பெரியார் சிலையை உடைப்பது குறித்து பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் கோரி, இந்து முன்னணி நிர்வாகியும், ...












