தைவான் எல்லையை சுற்றி நடைபெற்ற ராணுவ பயிற்சிகள் முடிவு – சீனா அறிவிப்பு..!

தைவான் மீது சீனா போர் தொடுக்க கூடும் என்ற நிலையில், சீனாவின் கடும் எதிா்ப்பையும் மீறி அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபைத் தலைவா் நான்சி பெலோசி தைவானுக்கு வருகை தந்து அதிபரை சந்தித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தைவானை சுற்றி சீனாவின் போர்க்கப்பல்கள், போர் விமானங்கள் பயிற்சிகள் மேற்கொண்டன.

மேலும் கடந்த 4-ந்தேதி தொடங்கிய சீனாவின் போர்ப்பயிற்சி 8-ந்தேதியுடன் முடிவுக்கு வரும் என அறிவித்திருந்த நிலையில், 8-ந்தேதியை தாண்டியும் தைவான் எல்லையில் போர் பயிற்சிகளை சீனா தொடர்ந்தது. இதனால் இரு நாடுகளுக்கிடையே போர் சூழும் அபாயம் ஏற்பட்டது.

இந்நிலையில் தைவான் எல்லையை சுற்றி நடைபெற்ற ராணுவ பயிற்சிகள் முடிவு பெற்றதாக சீன ராணுவம் அறிவித்துள்ளது.

மேலும் ‘ராணுவ பயிற்சிகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. இதையடுத்து தைவான் எல்லையில் வழக்கமான ரோந்துப் பணிகளை நடத்த திட்டமிட்டு வருகிறோம்’ என்று சீன ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.