தமிழகத்ததிலிருந்து குறிப்பாக கோவை மாவட்டத்திலிருந்து, அண்டை மாநிலமான கேரளத்திற்கு கனிம வளங்கள் கடத்தப்படுகின்றன. பொள்ளாச்சி பகுதியில் இருந்து அதிக அளவில் கருங்கற்கள், கேரளத்தின் திருச்சூருக்கு கொண்டுச் செல்லப்படுகிறது. குறைந்த அளவு கருங்கல் ஏற்றிச் செல்ல அனுமதி பெற்றுவிட்டு அதிகமான, கருங்கற்கள் கொண்டு செல்லப்படுவதால் தமிழகத்தின் இயற்கை வளங்கள் பறிபோகின்றன. பொள்ளாச்சியை அடுத்த ஜமீன்முத்தூரில் இருந்து, திருச்சூருக்கு ...

கோவை வடவள்ளி பக்கம் உள்ள பொங்காளியூரை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 70) இவரது மனைவி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நோய்வாய்பட்டு இறந்து விட்டார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ராமலிங்கம் சாணி பவுடர் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார்.சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு இறந்தார். ...

கோவை பீளமேடுஹோப் காலேஜ் பகுதியில் டாஸ்மாக் பார் நடத்தி வருபவர் நாகராஜன் ( வயது 42 ) இவரது பாரில் ஊழியராக வேலை பார்த்து வந்தவர் பாஸ்கரன.கடந்த 15 ஆம் தேதி பாரில் இருந்து வெளியே சென்றவர் திரும்பவில்லை, பின்னர் பணத்தை சரிபார்த்த போது ௹65 ஆயிரம் திருட்டுப் போய் இருப்பது தெரியவந்தது .இந்த பணத்தை ...

போதை மாத்திரை மற்றும் கஞ்சா போதையில் இருந்த 12 ஆம் வகுப்பு மாணவன் நண்பர்கள் தாக்கியதால் பலி கோவை சரவணம்பட்டி பெரிய வீதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி ஜீவா தம்பதியினர். இவர்களது மகன் காளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வரும் நிலையில் போதை மாத்திரை கஞ்சாவுக்கு அடிமையாகி பள்ளிக்கு சரியாக செல்லாமல் ...

கோவை சூலூர்பக்கம் உள்ள வஞ்சிபுரம், மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன், இவரது மனைவி ரங்கம்மாள்( வயது 73) இவரது கணவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு குழந்தைகள் இல்லை. இவர் தனது தங்கையுடன் வசித்து வந்தார்.கண் பார்வை பாதிக்கப்பட்டு இருந்தது.இதற்கு சிகிச்சை பெற்று வந்தார். குணம் அடையவில்லை. இதனால் வாழ்க்கையில் ...

கோவை: திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை சேர்ந்தவர் பழனி .அரசு பஸ் கண்டக்டர். இவரது மகன் பீரோ தாஸ் குமார் ( வயது 19 )இவர் கோவையில் உள்ள தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்தில் உள்ள விடுதியில் தங்கி இருந்து’பயோடெக்’ முதலாம் ஆண்டு படித்து வந்தார். பிரோ தாஸ் குமாருக்கு இளங்கலை வனவியல் பட்டப்படிப்பு படிக்க ஆசை இருந்துள்ளது. ...

கோவை கே .ஜி சாவடி அடுத்த நவக்கரையை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 23). இவர் சம்பவத்தன்று இரவு தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி தூங்க சென்றார். மறுநாள் அதிகாலை அவரது நண்பர் பாபு என்பவர் ஈஸ்வரனின் மோட்டார் சைக்கிளை 2 வாலிபர்கள் தள்ளி கொண்டு செல்வதை பார்த்தார். உடனே பாபு, ஈஸ்வரனுக்கு போன் ...

சென்னை: எந்தக் காலத்திலும், எந்தச் சூழலிலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைகளை விட்டுக் கொடுக்கமாட்டேன் என்றும் பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ் உடன் குறைந்தபட்ச சமரசம் கூட கிடையாது என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் மணிவிழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். ...

வட்ட செயலாளர்ல துவங்கி, சதுர செயலாளர் வரைக்கும் டாடா சுமோ சகிதமாய் தொண்டர்கள் சூழ தெருக்களில் சுற்றி வருகிற அரசியல் காலம் இது. லோக்கல் கவுன்சிலர் டெல்லிக்குப் போனாலே, அண்ணே… எங்க கவுன்சிலர் தெரியுமில்ல.. என பார்லிமெண்ட் வாசலில் டீக்கடைக்காரரிடம் அரைக்குறை இந்தியில் அலப்பறை செய்து வரும் நிலையில், எந்த விதமான ஆரவாரம்.. அடிபொடிகள்.. கட்-அவுட் ...

காங்கிரஸில் பதவி அளிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே அந்த பதவியை மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் ராஜினாமா செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தல், 5 மாநில சட்டமன்ற தேர்தல் உள்ளிட்டவற்றில் தேசிய கட்சியான காங்கிரஸ் பலமான பின்னடைவை சந்தித்த நிலையில் மீண்டும் கட்சியை வலுப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ...