போதை மாத்திரை மற்றும் கஞ்சா போதையில் இருந்த 12 ஆம் வகுப்பு மாணவன் நண்பர்கள் தாக்கியதால் பலி

போதை மாத்திரை மற்றும் கஞ்சா போதையில் இருந்த 12 ஆம் வகுப்பு மாணவன் நண்பர்கள் தாக்கியதால் பலி

கோவை சரவணம்பட்டி பெரிய வீதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி ஜீவா தம்பதியினர். இவர்களது மகன் காளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வரும் நிலையில் போதை மாத்திரை கஞ்சாவுக்கு அடிமையாகி பள்ளிக்கு சரியாக செல்லாமல் மாணவன் இருந்துள்ளான். இந்நிலையில் கஞ்சா போதையில் தான் படிக்கும் பள்ளிக்கு அருகில் உள்ள நூலகத்தின் முன்பு படுத்து உள்ளான் .இதனைக் கண்ட அவனது நண்பர்கள் சிலர் எழுந்து வீட்டுக்கு செல்லுமாறு வற்புறுத்தி உள்ளனர். இதனால் போதையில் இருந்த மாணவனுக்கும் அவனது சக நண்பர்களுக்கும் ஏற்பட்ட பிரச்சனையின் போது நண்பர்கள் சிலர் கைகளாலும், மம்பட்டி பிடியாலும் தாக்கியதால் போதையில் இருந்த மாணவனுக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கிருந்த சிலர் மாணவனை சரவணம்பட்டியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்த போது மாணவன் வரும் வழியிலேயே இருந்து விட்டார் என்பதை தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மாணவனின் தாயார் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் . மேலும் மாணவனை தாக்கிய நண்பர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.