கோவை கே .ஜி சாவடி அடுத்த நவக்கரையை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 23). இவர்
சம்பவத்தன்று இரவு தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி
தூங்க சென்றார்.
மறுநாள் அதிகாலை அவரது நண்பர் பாபு என்பவர் ஈஸ்வரனின் மோட்டார் சைக்கிளை
2 வாலிபர்கள் தள்ளி கொண்டு செல்வதை பார்த்தார். உடனே பாபு, ஈஸ்வரனுக்கு
போன் செய்து மோட்டார் சைக்கிளை யாருக்காவது கொடுத்தயா 2 பேர் தள்ளி
செல்கிறார்கள் என்றார். இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் தான் யாருக்கும் மோட்டார் சைக்கிளை தரவில்லை, அவர்களை பின் தொடர்ந்து போ நானும் வருகிறேன் என்றார். உடனே ஈஸ்வரன் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு நண்பர் பாபுவின் உதவியுடன் அந்த வாலிபர்களை மடக்கி பிடித்தார்.
பின்னர் அந்த வாலிபர்களை கே.ஜி சாவடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீஸ் விசாரணையில் அவர்கள் தெலுங்குபாளையத்தை சேர்ந்த யாசுப் (வயது 27)
மற்றும் செல்வபுரத்தை சேர்ந்த முகமது ஆசிப் (23) என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.
அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Leave a Reply