கோவை அடுத்த ஆலந்துறை அருகே உள்ள கள்ளிப்பாளையம் பகுதியில் வசித்து வந்தவர் ராஜேந்திரன் (37). இவரது மனைவி தேவி (31). இவர்களுக்கு தர்னிஷ் ,வாசுலேகா இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவன் மனைவி இருவரும் பூலுவபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் தற்காலிக துப்புரவு பணியாளராக வேலை செய்து வருகின்றனர். இன்று காலை 6 மணி அளவில் துப்புரவு வேலைக்காக ...

இந்தியாவில் இன்னும் சில தினங்களில் பெட்ரோல், டீசல் விலை அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கச்சா எண்ணெய் மீது விதிக்கப்பட்டுள்ள திடீர் வரி காரணமாக இந்த விலை உயர்வு ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் என்பது மிகவும் அத்தியாவசிய தேவையாகிவிட்டது. இன்று வாகனங்கள் இல்லாமல் எதுவும் இயங்காது என்ற நிலை வந்துவிட்டது. இப்படியான சூழ்நிலையில் ...

சென்னை சாலிகிராமத்தில் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., தென்சென்னை எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன், விருகம்பாக்கம் எம்.எல்.ஏ பிரபாகர் ராஜா உள்ளிட்ட தி.மு.க-வின் முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அப்போது, இந்தக் கூட்டத்துக்கான பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரின் இடுப்பை தி.மு.க. நிர்வாகிகளான பிரவீன், ...

அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த வழக்கு விசாரணையானது உச்சநீதிமன்ற நீதிபதி மகேஸ்வரி தலைமையிலான அமர்வு முன்பாக நடைபெற்று வருகின்றது. டிசம்பர் 15ஆம் தேதி இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக்காக இரண்டு வார காலம் விடுமுறைக்கு பின் இன்று ...

வரும் குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லியில் நடைபெறும் அணிவகுப்பில் தமிழக ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆண்டுதோறும் ஜனவரி 26 குடியரசு தினத்தன்று மாநில அரசுகளின் சார்பில் அலங்கார ஊர்திகள் டெல்லியில் அணிவகுத்து வரும். கடந்த ஆண்டு, வேலு நாச்சியார், பெரியார், பாரதியார் ஆகியோர் உருவங்கள் அடங்கிய தமிழக ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டு ...

2023-2024 ஆண்டுக்கான பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடர் ஜன.31ல் துவங்கி பிப்., 8 அல்லது 9ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு நடக்கும். இரண்டாம் அமர்வு மார்ச் இரண்டாவது வாரத்தில் துவங்கி, மே முதல் வாரத்தில் நிறைவடையும் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், பாராளுமன்ற பட்ஜெட் கூட்டம் ஜன. 31-ல் கூடுகிறது. 2023-2024ம் ...

கரூர்: வீரபாண்டிய கட்டபொம்மனின் 264-வது பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகம் சார்பில் மாவட்டத் தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் கரூர் தலைமை அஞ்சலகம் முன்பு நேற்று  (ஜன.3) தேவராட்டம் நடைபெற்றது. தொடர்ந்து கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா அருகே அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் உருவப்படத்திற்கு மாலை அணிவிக்க இரு சக்கர வாகனம் ...

பிராமணர் சங்கத்தின் மாநாடு : 7, 8  தேதிகளில் கோவையில் நடக்கிறது தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் கோவை மாவட்ட மாநாடு ஜனவரி 7, 8 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது என்று சங்கத்தின் மாவட்டத் தலைவர் என்.எஸ்.ரமேஷ் தெரிவித்தார். இது தொடர்பாக நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் வசிக்கும் பிராமணர்களை ஒன்றிணைக்கும் வகையில் ...

கோவை மாவட்டம் சிறுமுகை அருகே உள்ள வெள்ளி குப்பம்பாளையத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் சூப்பர்வைசராக விஜய் ஆனந்த் என்பவரும் விற்பனையாளராக கரிய பெட்டன், குணசேகரன் ஆகியோரும் பணியாற்றி வருகிறார்கள் .நேற்று மாலையில் ஊழியர்கள் மதுபானங்களை விற்பனை செய்து கொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 3பேர் திடீரென கையில் மறைத்து ...

கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள கிழவன் புதூர் ,இட்டேரி பகுதியில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக ஆனைமலை போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் அங்கு சோதனை நடத்தினார்கள். அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக அதே பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் ( 50 ) ஈஸ்வரன் ( 49 ) ஜெயக்குமார் ( 51 ...