கோவை ஈஷா யோகா மையத்தில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற ஆதியோகி திருவுருவத்தை போன்று, பெங்களூரு அருகே உள்ள சிக்கபல்லாபுரத்தில் 112 அடியில் ஆதியோகி திருவுருவம் ஜனவரி 15-ம் தேதி திறக்கப்பட உள்ளது. மகர சங்கராந்தி தினமான நாளை மறுநாள் சத்குரு முன்னிலையில் நடைபெறும் இவ்விழாவில் துணை குடியரசு தலைவர்  ஜகதீப் தன்கர் ஆதியோகி திருவுருவத்தை திறந்து ...

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி – வேலூர் நெடுஞ்சாலையில் அசைவ உணவகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த உணவகத்தில் 10க்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு 10.30 மணி அளவில் உணவக உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் பணி முடிந்ததும் உணவகத்தை பூட்டிவிட்டு சென்று விட்டனர். இதையடுத்து வழக்கம்போல் நேற்று  ...

கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த அக்டோபர் மாதம் 23 ஆம் தேதி கார் வெடித்து சிதறியது. இதில் காருக்குள் இருந்த அந்தப் பகுதியைச் சேர்ந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். தொடர்ந்து அவருடைய வீட்டில் போலீசார் சோதனை செய்து வெடிப் பொருட்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக என்.ஐ.ஏ தேசிய ...

கோவை மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் உள்ள பதிவாளர் காலனி,முனியப்பன் கோவில் அருகே பாஜக சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்படுவதாக இருந்தது.இதற்காக அந்த பகுதியில் போலீஸ் அனுமதி பெறாமல் 12 அடி உயர பாஜக கொடியை நட்டியிருப்பது தெரிய வந்தது. இது குறித்து போத்தனூர் போலீ சில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் பாஜக சுந்தராபுரம் பகுதி மண்டல ...

கோவை சின்ன தடாகம் பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரம் என்பவரின் மனைவி நித்தியா (32). இவர் சின்ன தடாகம் பகுதியில் இருந்து டவுன்ஹாலுக்கு பேருந்து மூலம் வந்தார் . ஒப்பணக்கர வீதி பகுதியில் பேருந்தில் இருந்து இறங்கிய போது அவர் பர்ஸில் வைத்து இருந்த மூன்று பவுன் தங்கச் செயின் , 52 ஆயிரம் ரூபாய் பணம் ...

கோவை: சாலை பாதுகாப்பு வாரம் 11-ந் தேதி தொடங்கி 17-ந் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி 3-ம் நாளான இன்று கோவையில் மாநகர போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் சார்பில் மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது. இதில் 300க்கும் மேற்பட்ட போலீசார், ரோட்டரி கிளப்பை சேர்ந்தவர்கள் மற்றும் உயிர் அமைப்பினர் பங்கேற்றனர். சாலை பாதுகாப்பு ...

தனது சொந்த மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை மற்றும் 18 ஆண்டு சிறை தண்டனை 1 ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.2000/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்… கோவை மாவட்டம் வால்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் 50 வயது தந்தை கடந்த 2012 ஆம் ஆண்டு ...

கோவை: காரைக்கால் பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 42). இவரது மனைவி ரேவதி (36). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கோவைக்கு வந்து, வெள்ளலூர் பேச்சி அம்மன் கோவில் வீதியில் வசித்து வருகின்றனர். இருவரும் பொள்ளாச்சி ரோடு டோல்கேட் அருகே ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வருகின்றனர். ...

கோவை ரத்தினபுரியை சேர்ந்த ராஜப்பன் இவரது மகன் ராஜசேகர் இவர் அடுப்புக்கரி தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் அவரது வீட்டின் அருகே ரஞ்சித் என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக குடியிருந்து வந்தார். வாகனங்களுக்கு டயர் விற்பனை தொழில் செய்யலாம் என்று கூறி ரூபாய் 15 லட்சத்து  65 ஆயிரம் வாங்கி விட்டு மேலும் சிலரிடம் பணத்தை ...

கோவை இடையர் வீதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 52). இவர் ராஜா வீதியில் சிறுதானிய கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில், சம்பவத்தன்று மனோகரன் மோட்டார் சைக்கிளில் அப்பகுதியில் சென்றார். அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் மோட்டார் சைக்கிளை நிறுத்தி காத்திருந்தார். அப்போது பின்னால், வந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் வழி விடுமாறு தொடர்ந்து ...