மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி – கோவை கமிஷனர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்..!

கோவை: சாலை பாதுகாப்பு வாரம் 11-ந் தேதி தொடங்கி 17-ந் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி 3-ம் நாளான இன்று கோவையில் மாநகர போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் சார்பில் மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது. இதில் 300க்கும் மேற்பட்ட போலீசார், ரோட்டரி கிளப்பை சேர்ந்தவர்கள் மற்றும் உயிர் அமைப்பினர் பங்கேற்றனர்.
சாலை பாதுகாப்பு குறித்து நடைபெற்ற இந்த பேரணியில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பதாகைகளை பேரணி வாகனத்தில் பொறுத்தியவாறு ஹெல்மெட் அணிந்து கொண்டு பேரணியில் பங்கேற்றனர்.
கோவை வ.உ.சி மைதானத்தில் தொடங்கிய இந்த பேரணியானது, மத்திய சிறைச்சாலை வழியாக காந்திபுரம் 100 அடி ரோடு வரை சென்று மீண்டும் வ.உ.சி மைதானத்தை வந்தடைந்தது. இந்தப் பேரணியை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பேரணியின் தொடக்க நிகழ்ச்சியில் கோவை போக்குவரத்து துணை கமிஷனர் மதிவாணன் மற்றும் போலீசார், தனியார் அமைப்பு நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.