சென்னை: துபாயில் மார்ச் 19ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை உலகளாவிய பொருளாதார உச்சி மாநாடு நடைபெற உள்ளது. பொருளாதார வளர்ச்சியை நோக்கிய அறிவை வளப்படுத்த உயர்கல்வி, தொழில் முறை கல்வி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான வாய்ப்புகளை ஆராய்ந் தறிதல் இம்மாநாட் டின் நோக்கமாகும். இம்மாநாட்டில் சிறப்பு விருந்தினர்கள் அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, ...
நேதாஜியின் பிறந்தநாளையொட்டி, அந்தமான் – நிக்கோபார் தீவுகளில் உள்ள 21 தீவுகளுக்கு, பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டன. டெல்லி: ஆண்டுதோறும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளான ஜனவரி 23ஆம் தேதி, பராக்கிரம தினமாக கொண்டாடப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி, நேற்று (ஜன.23) பராக்கிரம தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அந்தமான் – ...
ஈரோடு கிழக்கு தொகுதியில், 20 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான கிருஷ்ணன் உன்னி தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து, 26 ஆயிரத்து, 876 வாக்காளர்கள் உள்ளனர்.இதில்1 லட்சத்து, 10 ஆயிரத்து 713 ஆண் வாக்களர்களும்,1 லட்சத்து, 16 ஆயிரத்து 140 பெண் வாக்காளர்களும், ...
திருச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர் “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும். இடைத்தேர்தல் வேட்பாளர் விவகாரத்தில் எடுத்தோம், கவிழ்த்தோம் என முடிவெடுக்க முடியாது. கூட்டணி தர்மம் மதிக்கப்பட வேண்டும். திமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து ...
இடைத்தேர்தல் பிரசாரத்துக்கு வர முதல்வரை சந்தித்து அழைப்பு விடுத்தேன் என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். இடைத்தேர்தல் பிரசாரத்துக்கு வர முதல்வரை சந்தித்து அழைப்பு விடுத்தேன் என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் மீண்டும் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் சென்னை அண்ணா ...
இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு பயணிக்கப்பட்ட ரயில் டிக்கெட்டின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியா சுதந்திரம் அடைந்த ஆரம்ப காலத்தில் வாங்கப்பட்ட ரயில் பயணச்சீட்டு குறித்து சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டி மற்றும் அமிர்தசரஸ் இடையே பயணம் செய்ய இந்த டிக்கெட்டைப் பயன்படுத்தலாம். இந்த டிக்கெட்டில் 9 ...
ஈரோடு: இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து தமிழ்நாடு பாஜக முடிவெடுப்பதில் தயக்கம் காட்டி வருகிறது. இந்த நிலையில்தான் நேற்று குஜராத்துக்கு பறந்தார் ஓ பன்னீர்செல்வம். நேற்று இந்த பயணத்தில் அவர் முக்கியமான சில ஆலோசனைகளை மேற்கொண்டு இருக்கிறாராம். ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் ஓ பன்னீர்செல்வம் வேட்பாளரை களமிறக்க முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் ...
கோவை மாநகர சிறப்பு நுண்ணறிவு பிரிவு ( எஸ். ஐ .சி )உதவி போலீஸ் கமிஷனராக பணிபுரிந்து வந்தவர் பார்த்திபன். இவர் கோவை மாநகர நூண்ணறிவு பிரிவு உதவி போலீஸ் கமிஷனராகவும், பின்னர் சிங்காநல்லூர் சட்டம் – ஒழுங்கு உதவி போலீஸ் கமிஷனராகவும் மாற்றப்பட்டார். இந்த இடம் காலியாக இருந்தது. அவருக்கு பதிலாக சிறப்பு நுண்ணறிவு ...
அண்ணாநகர்: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குற்றசம்பவங்களை தடுக்கவும், பயணிகள் பாதுகாப்புக்காகவும் சிஎம்டிஏ அதிகாரி தலைமையில், 40 போலீசார் தினசரி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தியும், வெளியூர் பயணிகளை குறிவைத்தும் வழிப்பறி, செயின் மற்றும் செல்போன் பறிப்பு, பிக்பாக்கெட், லேப்டாப் திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் அதிகரித்து ...
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட விரும்பும் தொண்டர்கள் இன்று முதல் வரும் ஜனவரி 26ம் தேதி வரை விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா மாரடைப்பால் காலமானார். இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்.27ம் ...













