இடைத்தேர்தல் பிரசாரத்துக்கு வர முதல்வருக்கு அழைப்பு விடுத்தேன்- ஈவிகேஎஸ் இளங்கோவன்..!

டைத்தேர்தல் பிரசாரத்துக்கு வர முதல்வரை சந்தித்து அழைப்பு விடுத்தேன் என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். இடைத்தேர்தல் பிரசாரத்துக்கு வர முதல்வரை சந்தித்து அழைப்பு விடுத்தேன் என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் மீண்டும் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை, காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று சந்தித்தார். இதையும் படிக்க- பஞ்சாபில் பெரிய திரைப்பட நகரத்தை நிறுவ திட்டமிட்டுள்ளோம்: முதல்வர் பகவந்த் மான் பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தேர்தலில் ஆதரவு தெரிவித்ததற்கு திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினிடம் நன்றி தெரிவித்தேன்.

மேலும் இடைத்தேர்தல் பிரசாரத்துக்கு வர முதல்வரை சந்தித்து அழைப்பு விடுத்தேன். முதல்வர் மீது தமிழ்நாடு மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். அது எங்களுக்கு வெற்றியை பெற்றுத் தரும். ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவினர் ஏற்கெனவே பிரசாரத்தை தொடங்கி விட்டனர். காங்கிரஸ் மேலிடம் விரும்பியதால் என்னை வேட்பாளராக அறிவித்துள்ளனர். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.