சென்னை மதுரவாயலில் திமுக சார்பில் மறைந்த பேராசிரியர் க. அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மதுரவாயல் எம்எல்ஏ கணபதி தலைமை தாங்கிய நிலையில், திமுக பொருளாளர் டி.ஆர் பாலு, அமைச்சர் மா. சுப்பிரமணியன், துணை பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் உட்பட கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் போது ...
அதிமுக கூட்டணியில் பாஜக இருக்கிறதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் அடுத்த மாதம் 27 ம் தேதி நடைபெறும் இடைத்தேர்தலுக்கான அதிமுக பணிமனை கால்கோள் விழா இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், பந்தல்கால் நட்டு பணியை தொடங்கி வைத்தார். ...
கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸில் நேற்று இரவு துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில், குறைந்தது 10 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு, துப்பாக்கி கலாசாரமே காரணம் என பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர். லாஸ் ஏஞ்சல்ஸ் மான்டேரி பூங்காவில் சீன சந்திர புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது இந்த அசம்பாவிதம் அரங்கேறியுள்ளது. ...
ஈரோடுகிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெராவின் மறைவைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 31-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. பிப்.27-ம் தேதி வாக்குப்பதிவும் மார்ச் 2-ல் வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளன. அத்தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வாய்ப்பு காங்கிரஸுக்கு வழங்கப்பட்டது. அதில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுவார் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இது ...
கடந்த 4 ஆண்டுகளில் பாகிஸ்தான் நாட்டில் 42 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக, பாகிஸ்தான் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் முர்தாசா ஜாவேத் அப்பாசி அறிவித்துள்ளார். இதுகுறித்த அந்நாட்டு நாடாளுமன்றத்தில், “பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்த 15 பத்திரிகையாளர்கள், சிந்துவை சேர்ந்த 11 பத்திரிகையாளர்கள், கைபர் பக்துன்க்வாவைச் சேர்ந்த 13 பத்திரிகையாளர்கள், பலுசிஸ்தானைச் சேர்ந்த 3 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். ...
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் பெண் வேட்பாளர் போட்டியிடுவார் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற வேட்பாளராக இருந்த காங்கிரஸ் கட்சியின் ஈவெரா திருமகன் கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென மரணமடைந்தார். இதனால் காலியாக ...
அரக்கோணம் அருகே கோவில் திருவிழாவில் கிரேன் சரிந்த விபத்தில் பலி எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே கீழவீதி கிராமத்தில் மண்டியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடந்த மயிலேறு நிகழ்ச்சியின் போது எதிர்பாராத விதமாக கிரேன் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இந்த சம்பவத்தில் முத்துகுமார் (39), பூபாலன் (40), ...
ஊட்டி: மலை பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் தோடர், இருளர், குரும்பர், காட்டுநாயக்கர், பணியர், கோத்தர் உள்ளிட்ட பழங்குடியின மக்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் பூர்வகுடி இன மக்களான இவர்கள் திருமண விழாக்களும், கோவில் நிகழ்ச்சிகளும் இன்றும் பழமை மாறாமல் தங்கள் முன்னோர்களின் பாரம்பரிய வழிகாட்டுதலின் முறைப்படி நடத்தி வருகின்றனர். இவர்களில் ...
கோவை: வருகிற 26-ந் தேதி நாடு முழுவதும் குடியரசு தினம் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. டெல்லியில் நடக்கும் குடியரசு தின விழாவில் பல்வேறு மாநிலங்களின் கலாசாரத்தை எடுத்து கூறும் வாகன ஊர்வலம் மற்றும் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இந்த கலாசார நிகழ்ச்சியில் பங்கேற்பது பெரும் கவுரவமாக கருதப்படுகிறது. இந்நிலையில் வருகிற 26-ந் தேதி டெல்லியில் ...
கோவையை அடுத்த மருதமலையில் சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திரு விழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு தைப்பூச திருவிழா வருகிற 29-ந் தேதி முதல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 7-ந் தேதி வரை 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. 29-ந் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. அன்று காலை 6.45 ...











